ஊழியர் சேமலாப வைப்பீட்டை உடனடியாக அறிந்துகொள்ள குறுஞ்செய்தி திட்டம்: அமைச்சரவை தீர்மானம்

Published By: J.G.Stephan

13 Feb, 2020 | 01:05 PM
image

ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு செலுத்தப்படும் தொகை அங்கத்தவர்களின் கணக்கீடுகளில் வைப்பீடு செய்யப்படுவதை உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் கையடக்க தொலைபேசி சேவை வாயிலாக அறியப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் மாதாந்தம் தமது ஊழியர் சேமலாப கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையை அந்த அங்கத்தவர்கள் எந்தவித சிரமமும் இன்றி அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  தற்பொழுது ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் கொண்டுள்ள நிலையான சேவையாளர்களின் எண்ணிக்கை சுமார் 2.6 மில்லியன் ஆகும். தற்பொழுது உள்ள நடைமுறைக்கு அமைவாக ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது பங்களிப்பு தொகை நிதியத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்காக 06 தொடக்கம் 12 மாத காலப்பகுதி செல்வதுடன் இதன் காரணமாக பங்களிப்பு செய்யப்பட்ட நிதி கணக்கில் சேர்க்கப்பட்டமை தொடர்பில் பல பிரச்சினைகளை அங்கத்தவர்கள் அடிக்கடி எதிர்கொள்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இதனால் இந்த நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது மாதாந்த பங்களிப்பு தொகை தமது கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதை மாதாந்தம் அவர்களால் உறுதி செய்யக்கூடிய வகையில் கணக்கில் சேர்க்கப்பட்டதுடன் அங்கத்தவர்களினால் தாம் குறிப்பிடும் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ் செய்தியின் மூலம் அறிவிக்கும் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு திறனாற்றல் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39