1000ரூபா பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் - இரா.தங்­கவேல்  

Published By: J.G.Stephan

13 Feb, 2020 | 12:38 PM
image

ஆயிரம் ரூபா அடிப்­படைச் சம்­ப­ளத்­துக்கு இன்று தோட்டத் தொழி­லா­ளர்கள் மத்­தியில் பெரும் அழுத்­தமும் ஆத­ரவும்  பெரு­கு­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. புதிய அர­சாங்கம் எதிர்­வரும் மார்ச் முதலாம் திகதி தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா அடிப்­படைச் சம்­பளம் தரு­வ­தற்கு இணக்கம் தெரி­வித்­ததை தொடர்ந்து தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ளனம் இந்த தீர்­மா­னத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது.



எது எப்­ப­டி­யா­னாலும் இந்த மக்­க­ளுக்­கான சம்­பள உயர்வு பெற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும். இந்த ஆயிரம் என்ற தொகை யார் மூல­மாக கிடைத்­தாலும்  நல்­லதே என இலங்கை தேசிய தொழி­லாளர் காங்­கி­ரஸின் பொதுச்­செ­ய­லா­ளரும் முன்னாள் மத்­திய மாகாண சபை பிரதித் தலை­வ­ரு­மான இரா.தங்­கவேல் தெரி­வித்தார்.

அவர் இது குறித்து மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

தோட்ட நிர்­வா­கி­களில் சிலர் கையாளும்  குறுக்கு வழி­களும் இலாபம்  ஈட்­டு­வ­தற்குக் கடைப்­பி­டிக்­கின்ற தந்­தி­ரங்­க­ளுமே சம்­பள இழுத்­த­டிப்­புக்­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­துள்­ளது.

புதிய அர­சாங்கம் ஆயிரம் ரூபா சம்­பள உயர்வை அறி­வித்த பின்னர்  தமது எதிர்ப்பைக் காட்­டு­கின்ற முத­லா­ளி­மார்­களின் பிர­தி­நி­திகள் அதற்­கான ஆக்­க­பூர்­வ­மான கார­ணி­களைக் கொடுக்கத் தவறி இருக்­கி­றார்கள். அவர்­க­ளது தொடர் ஒப்­பா­ரி­யாக தோட்­டங்கள் இலா­ப­க­ர­மாகச் செயற்­ப­ட­வில்லை என்­பதை கூறி மக்­களை ஏமாற்றி வரு­கின்­றனர். ஆனால் அவர்­க­ளது உண்­மை­யான நோக்கம் கொள்ளை  இலாபம்  ஈட்­டு­வது என்­பதை  மூடி­ம­றைத்து மேலும் மேலும் அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து வரிச்­ச­லு­கை­க­ளையும் ஏனைய சாதகத் தன்­மை­க­ளையும் ஈட்­டிக்­கொள்கின்றனர்.

தோட்­டங்­களைத் திட்­ட­மிட்டே காடாக்கி வரு­வ­தோடு இன்று பொன்­கொ­ழிக்கும் பூமி­யாக இருக்­கின்ற தோட்­டங்­களை வன ஜீவ­ரா­சி­க­ளினதும், கொடிய விலங்­கு­க­ளி­னதும், அன்­றாடம் தோட்டப் பகு­தி­களில் இருந்து நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி தோட்டத் தொழி­லா­ளர்­க­ளைக்­கொட்டித் தீர்க்கும் குள­வி­க­ளி­னதும் கோட்­ட­மாக மாற்றி அமைத்­துள்­ள­மையே  இன்­றைய தோட்ட முத­லா­ளிகள் ஆற்­றிய பெரும் பங்­காகும். 

சென்ற கூட்­டுப்­பே­ரத்தின் போது இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் தலைவர் ஆறு­முகன் தொண்­டமான் வலி­யு­றுத்­திய கோரிக்கை தோட்­டங்­களைச் சுத்­த­மாக அதா­வது தேயிலை மலை­களை சுத்தம் செய்­ய­வேண்டும் என்­பதை ஏற்­றுக்­கொண்டு கூட்டு ஒப்­பந்­தத்­திலும் சேர்த்­துக்­கொண்ட தோட்ட முத­லா­ளிமார் கம்­ப­னி­களில் எத்­தனை தோட்­டங்­களை சுத்தம் செய்­தி­ருக்­கி­றார்கள்.

எனவே தோட்ட முதலாளிமார்களின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால்  அரசாங்கம் மேலும் மேலும் வரிச்சலுகைகளையும் மற்ற ஒத்து ழைப்பையும் வாரி வழங்குவதைத் தவிர்த்து அவர்களது தந்திரமான திட்டங்களையும் அம்பலப்படுத்துவதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ‍என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08