எகிப்தில் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை !

Published By: R. Kalaichelvan

13 Feb, 2020 | 11:55 AM
image

எகிப்திய பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 17 பயங்ரவாதிகள் சுட்டுக்கொல்லபட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

எகிப்தின் அல் - அரிஷ் நகரத்தின் ஓபீடாட் மாவட்டத்தில் ஒரு பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக  கிடைக்கப்பெற்ற தவலுக்கு அமைய குறித்த பகுதியில் சுற்றி வளைப்பை மேற்கொண்ட எகிப்திய பொலிஸார் பயங்கரவாதிகளின் மீது தாக்குதல்களை மேற்கொண்டதோடு , அவர்களின் மறைவிடத்தில் இருந்து பல்வேறு வகையான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.

அத்தோடு ஆரம்பத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து 11 பயங்ரவாதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், அவர்கள் வைத்திருந்திருந்த ஆயுதங்களையும் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அதேவேளை, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கராவதிகள் தப்பிக்க முயன்றுள்ளனர். அவ்வாறு தப்பிக்க முயன்ற 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதோடு, அவர்களிடம் இரண்டு தற்கொலை தாக்குல்களுக்கு பயன்படுத்தும் தற்கொலை உடைகள் இருந்தாக படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10 ஆம் திகதி வடக்கு சினாயில் இராணுவ சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதலைகளை மேற்கொள்ள முயற்சித்துள்ள நிலையில் அதனை முறியடித்த படையினர் பயங்கராவதிகள் 10 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எகிப்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் மீது குறிவைக்கப்பட்டடு நடத்தப்பட்ட தாக்குதல்களில் தற்போது வரை 840 க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்த புள்ளி விபரங்கள் 60 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் தாக்குதல்களின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Photography by : Reuters file photo

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13