சி.ஐ.டி, எப்.சி.ஐ.டி., எஸ்.ஐ.யூ. விசா­ரணை செய்த விட­ய­தான வழக்­கு­களை இடை­நி­றுத்த முடி­யாது: சட்டமா அதிபரின் அறிவிப்பு

Published By: J.G.Stephan

13 Feb, 2020 | 10:56 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம்,  எப்.சி.ஐ.டி. எனும் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு மற்றும் எஸ். ஐ.யூ. எனப்­படும் பொலிஸ்  விஷேட விசா­ரணைப் பிரி­வூ­டாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள விசா­ர­ணை­க­ளுக்கு அமைய முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் வழக்கு விசா­ர­ணை­களை தற்­கா­லி­க­மாக இடை நிறுத்தி வைக்­கு­மாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்­ர­ம­ரத்ன  சட்ட மா அதி­ப­ரிடம் கோரிக்கை முன்­வைத்­தி­ருந்த நிலையில், அதனை சட்ட மா அதிபர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவேரா முற்­றாக நிரா­க­ரித்­துள்ளார். குறித்த விசா­ரணைப் பிரி­வு­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட பிர­சித்­த­மான விவ­கா­ரங்கள் குறித்த வழக்கு விசா­ர­ணை­களை இடை நிறுத்த முடி­யாது என சட்ட மா அதிபர் எழுத்து மூலம் திட்­ட­வட்­ட­மாக பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு அறி­வித்­துள்ளார்.

குறித்த விசா­ரணைப் பிரி­வுகள் மூன்று ஊடா­கவும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள விசா­ர­ணைகள் எவ­ருக்­கேனும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் வண்ணம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளதா என்­பது குறித்து பிரத்­தி­யேக விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளதால்  இவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­படும் வழக்­கு­களை இடை நிறுத்­து­மாறு பதில் பொலிஸ் மா அதிபர் கோரி­யுள்ளார்.

அந்த விசா­ர­ணைகள் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு ஒன்று ஊடாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது தொடர்­பிலும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.  இந் நிலையில் குறித்த விசா­ர­ணை­களில், அவ்­வி­சா­ரணைப் பிரி­வுகள் முன்­னெ­டுத்த விசா­ரணை நட­வ­டிக்­கைகள் பக்கச் சார்­பின்றி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளமை உறு­தி­யானால் மட்டும் , குறித்த வழக்­கு­களை முன் கொண்டு செல்­வது உசி­த­மா­னது என பதில் பொலிஸ் மா அதிபர் , சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்­பி­யுள்ள கோரிக்கை கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்தில்,

  ஒரு விசா­ர­ணையின் போது வெளிப்­ப­டுத்த வேண்­டிய சாட்­சி­களை மறைத்து, பொய் சாட்­சி­களை உரு­வாக்கி ஒரு பக்கச் சார்­பாக செயற்­பட்டு விசா­ரணை அதி­கா­ரிகள் செயற்­பட்­டி­ருந்தால் நியா­யத்தை நிலை நிறுத்தும் செயற்­பா­டு­க­ளுக்கு  அது பாரிய தடை­யாக அமையும். ரஞ்சன் ராம­நா­யக்­கவின் குரல் பதி­வு­களை மையப்­ப­டுத்தி இடம்­பெறும் விசா­ர­ணை­களில், பொலி­ஸா­ருக்கு கிடைத்­துள்ள முறைப்­பா­டு­களை மையப்­ப­டுத்­தியே இந்த விஷேட கோரிக்­கையை முன்­வைக்­கின்றேன்.' என தெரி­வித்­துள்ளார்.

 எவ்­வா­றா­யினும் இந்த கோரிக்கை  கடிதம் தொடர்பில் சட்ட மா அதிபர்  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவேரா இரண்டு பக்­கங்­களைக் கொண்ட  ஆங்­கில மொழி மூல­மான பதிலை பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு அனுப்பி வைத்­துள்ளார்.  அதில் பதில் பொலிஸ்  மா அதிபர் தெரி­வித்­தி­ருந்த அத்­தனை விட­யங்­க­ளையும், ஜனா­தி­பதி ஆணைக் குழு  சட்டத்தின்  393 ஆம் அத்தியாயம், அரசியலமைப்பின் 4 (சி) உறுப்புரை, 105 ஆம் உறுப்புரை ஆகியவற்றை தெளிவுபடுத்தி சட்ட மா அதிபர் நிராகரித்து பதில் அனுப்பியதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன கேசரிக்கு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38