மக்கள் நலன்­சார்ந்த அர­சாங்­கத்தை உரு­வாக்க அனை­வரும் பாடு­ப­டுவோம்: ஐ.தே.முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்சித் தலை­வர்கள்  

Published By: J.G.Stephan

13 Feb, 2020 | 10:38 AM
image

பரந்­து­பட்ட கூட்­டணி அமைத்து பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மக்கள் நலன்­சார்ந்த அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு நாம் அனை­வரும் பாடு­ப­டுவோம் என்று புதிய கூட்­ட­ணியில் அங்கம் வகிக்­க­வுள்ள ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்சித் தலை­வர்கள் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர்.

சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான  புதிய கூட்­ட­ணியில் அங்கம் வகிக்­க­வுள்ள பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் நேற்று சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். சஜித் பிரே­ம­தா­சவின் இல்­லத்தில் நேற்று நடை­பெற்ற இந்த சந்­திப்பில்  ஜாதிக ஹெல­உ­று­ம­யவின் தலைவர் சம்­பிக்க ரண­வக்க தமிழ் முற்­போக்­குக்­கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின்  தலைவர் ரவூப் ஹக்கீம்  அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன்  மற்றும் கூட்­ட­ணியின் செய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டார ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.



இந்த பேச்­சு­வார்த்­தையை யடுத்து பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து அறிக்­கை­யொன்­றினை வெளியிட்­டுள்­ளனர். அந்த அறிக்­கை­யி­லேயே இந்த இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது

ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் நாம் சமீ­ப­கா­ல­மாக நல்­லு­ற­வுடன் இணைந்து செயற்­பட்­டு­வ­ரு­கின்றோம். இன்­றைய அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து பிர­மாண்­ட­மான கூட்­ட­ணியை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய  நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இடைக்­கால அர­சாங்­க­மா­னது மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை மீறி செயற்­பட்டு வரு­கின்­றது.

இந்த நிலையில் புதிய கூட்­டணி தொடர்பில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் செயற்­குழு பல தீர்­மா­னங்­களை எடுத்­துள்­ளது. அதனை நாம் வர­வேற்­கின்றோம். ஐ.தே.க.வின் தலை­வ­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதவி வகிப்­ப­துடன் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பல­மான கூட்­டணி அமைத்து செயற்­ப­ட­வேண்டும் என்ற செயற்­கு­ழுவின் தீர்­மா­னத்தை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம்.

கூட்­ட­ணியின் தலை­வ­ராக சஜித் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பிர­தமர் வேட்­பா­ள­ரா­கவும் வேட்­பாளர் தெரி­வுக்­கு­ழுவின் தலை­வ­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தடன் செயலாளராக மத்தும பண்டாரவை நியமிக்கும் தீர்மானத்தையும் நாம்  வரவேற்கின்றோம்.

அந்த அடிப்படையில் புதிய கூட்டணியை பரந்துபட்டதாக மாற்றி மக்கள் நலன்சார்ந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட உடன்படுகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46