10 வருடங்களுக்கு பின் திருமலை கடற்கரையில் அபூர்வம்

Published By: Daya

12 Feb, 2020 | 04:46 PM
image

திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நகரின் கடற் கரைப்பிரதேசத்தில் கடல் ஆமை ஒன்று நேற்று காலை முட்டைகளை இட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த ஜந்து முதல் பத்து வருடங்களுக்கு பிறகே இவ்வாறான அபூர்வமான நிகழ்வு இடம்பெற்றதைக் காணக்கிடைத்ததாக அப்பிரதேச வாசிகள் மற்றும் அப்பிரதேசத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் மற்றும் நடைப்பயிற்சியில் ஈடுப்படுபவர்கள் தெரிவித்தனர்.

அதன் பின் அங்கிருந்தவர்களால் வனவள ஜீவராசிகள் தொலைப்பேசி மூலம் தகவல் வழங்கப்பட்டது. 

இதனையடுத்து கடற்கரைக்கு விரைந்த வன ஜீவராசிகள் அங்க இருந்த 110 ஆமை முட்டைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், முட்டைகளை எடுத்துச் சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு முட்டைகள் தொடர்பாக வினாவியபோது அவர்கள் தெரிவித்ததாவது,

 எடுத்துச்செல்லப்பட்ட கடல் ஆமையில் 110 முட்டைகளும் தங்களால் பாதுகாக்கப்படும் கடற்கரை பிரதேசத்தில் புதைக்கப்பட்டுப் பாதுகாக்கப் படுவதாகவும், முட்டைகள் பொறித்து ஆமைக்குஞ்சுகள் வெளிவந்த நிலையில் கடலுக்குள் பாதுகாப்பாக விடப்படும் எனத் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right