பகுடிவதைத் தொடர்பில் கைது செய்யப்பட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கும் எதிர்வரும் ஜுன் மாதம் 28 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை மஹர பிரதான நீதவான் மஹிந்த பிரபாத் ரணசிங்க விடுத்துள்ளார். 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களில் 3 மாணவிகளும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.