அர­சி­ய­ல­மைப்பில் வழங்­கப்­பட்­டுள்ள மொழி­யு­ரி­மைகள்

13 Feb, 2020 | 01:32 PM
image

நமது நாட்டின் இனங்­க­ளுக்­கி­டையே உறவு சீர்­கெ­டவும், நம்­பிக்­கை­யீனம் ஏற்­ப­ட­வும்­ அதன் மூலம் இன­ரீ­தி­யாகப் பல்­வேறு பிரச்­சி­னைகள் தோன்றி இன்று சர்­வ­தே­சம்­வரை உள்­நாட்டுப் பிரச்­சி­னைகள் வியா­பிக்க வழி­வ­குத்­தது மொழிப் பிரச்­சி­னையே. அதா­வது இந்­நாட்டின் இரு தேசிய மொழி­களில் ஒன்­றான தமிழ் மொழி­யைப்­பு­றந்­தள்ளி மற்­றைய மொழி­யான சிங்­க­ளத்தை மட்டும் நாட்டின் ஒரே நிர்­வாக மொழி­யாக, அர­ச­க­ரும மொழி­யாகப் பாரா­ளு­மன்­றத்தில் சட்டம் கொண்­டு­வந்து நிறை­வேற்றி அதனை நடை­மு­றைப்­ப­டுத்த முயன்­ற­மையே அது­வா­கின்­றது.

1956 ஆம் ஆண்டு இனப்­பி­ள­வுக்கு வழி­வ­குத்த குறித்த மொழிச்­சட்டம் நாட்டில் பல பிரச்­சி­னை­களை, வன்­மு­றை­களை, அழி­வு­களை ஏற்­ப­டுத்­தி­யதன் தாக்கம் உண­ரப்­பட்டு 1987 இல் இது மீளாய்வு செய்து மாற்­றப்­பட வேண்­டிய கட்­டா­ய­நிலை உரு­வாக்­கப்­பட்­டது. இலங்­கைக்­குள்ளும் வெளி­யி­லு­மி­ருந்து மேலெ­ழுந்த கோரிக்­கைகள் மற்றும் அழுத்­தங்­களால் பாரா­ளு­மன்­றத்தால் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்ட தனிச் சிங்­க­ளச்­சட்டம் முப்­ப­தாண்­டு­க­ளுக்குப் பின் ­கை­விடும் நிலை ஏற்­பட்­டது.

ஒரு நாட்டின் உரி­மை­யுள்ள குடி­ம­க­னுக்­காக அங்­கீ­கா­ர­மாக இருப்­ப­வற்­றில்­அந்­நாட்டில் அவ­னது தாய்­மொ­ழிக்­கு­ரிய உரி­மையும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மற்­றை­யது அவ­னது சமயம். இவ்­வா­றுள்ள நிலையில் தற்­போ­துள்ள நாட்­டின்­ அ­ர­சி­ய­மைப்பின் விதி­க­ளின்­படி தமிழ் மொழிக்கும் நாட்டில் சமத்­துவ உரிமை சட்­டப்­படி வழங்­கப்­பட்­டுள்­ளது. 1956இல் விடப்­பட்ட தவறு அல்­லது செய்­யப்­பட்ட குற்றம் முப்­பது ஆண்­டு­க­ளுக்குப் பின் அதா­வது 1987 இல் திருத்­தப்­பட்­டாலும் கூட மேலும் முப்­பது ஆண்­டுகள் கடந்­து­விட்ட நிலை­யி­லும்­இன்றும் முற்­றாகத் திருத்­தப்­ப­ட­வில்லை, நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அர­சி­ய­ல­மைப்பின் கண்­டு­கொள்­ளப்­ப­டாத பக்­க­மா­க­வே­யுள்­ளது.

எது எவ்­வா­றி­ருந்த போதிலும் நமது நாட்டில் நமது தாய்­மொ­ழிக்கு அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக வழங்­கப்­பட்­டுள்ள சட்ட ரீதி­யான உரி­மை­கள்­ எ­வை­யென்­பதை நாம் அறிந்து வைத்­தி­ருப்­பது அவ­சி­ய­மாகும். மொழி­யு­ரிமை தொடர்பில் அறி­வின்­மையும் தமிழ் மொழிப்­ப­யன்­பாட்­டுக்கு உள்ள தடை­க­ளி­லொன்­றாகும்.

அர­சி­ய­மைப்பின் 4ஆம் அத்­தி­யாயம் மொழிகள் தொடர்­பான அடிப்­படைச் சட்­ட­மாக அமைந்­துள்­ளது. அதி­லுள்ள ஏற்­பா­டுகள் 1987ஆம் ஆண்டின் 13ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் மூலமும் திருத்­தத்­துக்குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. மொழி­யு­ரிமை அடிப்­படை உரி­மை­யென்று அர­சி­ய­ல­மைப்பின் 3ஆம் அத்­தி­யா­யத்தின் 12 (2) ஆம் உறுப்­பு­ரையில் கூறப்­பட்­டுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பின் 13ஆவது திருத்­தத்தின் கீழாக 18 (1) மற்றும் 18 (2) ஆம்­ உ­றுப்­பு­ரை­க­ளின்­படி சிங்­க­ளமும் தமிழும் இலங்­கையின் அர­ச­க­ரும மொழிகள் ஆதல்­வேண்­டு­மென்று கூறப்­பட்­டுள்­ளது. அர­ச­க­ரும மொழிகள் என்னும் போது அது நாட்டின் நிர்­வாக மொழி­யாகச் செயற்­படும் உரிமை கொண்­டது என்று பொருள்­படும். அதா­வது ஒரு குடி­மகன் தனது அன்­றாடக் கட­மை­க­ளையும் அர­சாங்­கத்­து­ட­னான தொடர்­புகள்,  பரி­மாற்­றங்­களை  தான் விரும்பும் மொழியில் எது­வித தயக்­கமோ, தடையோ, தாம­தமோ இன்றி திருப்­தி­க­ர­மாக நிறை­வேற்­றிக்­கொள்ள முடியும் என்­பது பொரு­ளாகும். சட்டம் உள்­ளது அதை நடை­மு­றைப்­ப­டுத்த உரிய, உகந்த செயற்­றிட்டம் எதுவும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பதே கசப்­பான உண்­மை­யாகும்.

அர­சி­ய­ல­மைப்பின் 13ஆம் திருத்­தத்தின் 19ஆம் உறுப்­பு­ரையில் இந்­நாட்­டின்­ அ­தா­வது இலங்­கையின் தேசிய மொழிகள் சிங்­க­ளமும், தமிழும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் குறித்த இரு மொழி­க­ளையும் தாய்­மொ­ழி­யா­கக்­கொண்­ட­வர்கள். இந்­நாட்டின் தேசிய இனத்­தவர் என்று அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டா­கத்­தெ­ளி­வாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இந்த உண்­மையை அதா­வது நாட்­டின்­ இ­ரு­மொ­ழி­களும் தேசி­ய­மொ­ழிகள் அவற்­றின்­ உ­ரித்­தா­ளி­க­ளான இரு இனத்­த­வர்கள் என்­பதை இரு­ சா­ராரும் சரி­யாகப் புரிந்­து­கொள்­ளாத நிலையே காணப்­ப­டு­கின்­றது.

1978 ஆம் ஆண்டின் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள அர­சி­ய­ல­மைப்­புக்கு 1987 இல்­மேற்­கொள்­ளப்­பட்ட மொழி­யு­ரி­மைகள் பற்­றிய திருத்­தங்­க­ளுக்கு மேல­தி­க­மாக 1988 இல் 16ஆவது திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதில் நாடு முழு­வதும் அதா­வது இலங்கை முழு­வதும் சிங்­க­ளமும் தமிழும் நிர்­வாக மொழி­க­ளாக இருத்­தல்­வேண்­டு­மென்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. குறித்த 16 ஆவது திருத்­தத்தின் 22 (1) உறுப்­பு­ரையே அது­வாகும். குறித்த திருத்­தத்­தின்­படி நாடு முழு­வதும் நிர்­வாக மொழி­க­ளாக ஏற்­கப்­பட்­டி­ருந்­த­போதும் வடக்கு –கிழக்கு மாகா­ணங்­க­ளி­ரண்­டி­ன­தும் ­மு­தன்மை நிர்­வாக மொழி தமி­ழா­கவும் ஏனைய ஏழு மாகா­ணங்­க­ளி­னதும் முதன்மை நிர்­வாக மொழி சிங்­களம் என்றும் வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இருந்தபோதிலும் முதன்மை நிர்­வாக மொழி­யாகப் பயன்­பாட்­டி­லுள்ள மாகா­ணங்­களில் குறிப்­பிட்ட பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வு­களில் குறிப்­பிட்ட அள­வி­ன­ராக மற்­றைய மொழி­யினர் உள்­ள­போது அப்­பி­ர­தேச செய­ல­கப்­பி­ரி­வு­களை இரு­மொழி அதா­வது சிங்­க­ளமும் தமிழும் நிர்­வாக மொழி­யு­ரிமை கொண்ட இரு­மொழிப் பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளாக அர­சி­ய­ல­மைப்பின் 16 ஆவது திருத்­தத்தின் 22 (1) உறுப்­பு­ரையின் கீழ் ஜனா­தி­ப­தியால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­படலாம். அவ்­வாறு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­படும் பிர­தேச செய­லகப் பிரி­வு­களில் நடை­மு­றை­யில்­ இ­ரு­மொ­ழி­களும் சமத்­துவம் கொண்ட மொழி­க­ளா­கவே கணிக்­கப்­ப­ட­வேண்டும்.

குறித்த அர­சி­ய­ல­மைப்பின் 16 ஆவது திருத்­தத்தின் 23 (3) ஆம் உறுப்­பு­ரையின் கீழ்­ சிங்­கள மொழி நிர்­வாக மொழி­யாகப் பயன்­ப­டுத்­தப்­படும் பிர­தே­ச­மொன்றில் தமி­ழில்­ அல்­லது தொடர்பு மொழி­யான ஆங்­கி­லத்தில் அரச அலு­வ­ல­ரு­டன் ­தொ­டர்பு கொண்டு தனது தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள ஒரு­வ­ருக்கு உரி­மை­யுண்டு. அதே உரிமை தமிழை நிர்­வாக மொழி­யாகக் கொண்ட பிர­தே­சங்­களில் மற்­றைய மொழி­யி­ன­ருக்கும் உண்டு.

ஒருவர் ஏதேனும் அலு­வ­லக முறை­யான இடாப்பை, பதி­வேட்டை, வெளி­யீட்டை அல்­லது வேறு ஆவ­ண­மொன்றைச் சட்­டப்­படி பார்­வை­யி­டு­வ­தற்கும் பரி­சீ­லிப்ப தற்கும், பிர­தியைப் பெற்றுக்கொள்­வ­தற்கும் உரிமை உள்­ள­போது  அதை சிங்­க­ளத்­திலோ, தமி­ழிலோ அல்­லது ஆங்­கி­லத்­திலோ பெற்­றுக்­கொள்ள முடியும். தேவைப்­ப­டும்­போது அவற்றின் மொழி­பெ­யர்ப்பை பெற்­றுக்­கொள்­ளவும் முடியும்.

இரு­மொழிப் பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளாக இது­வரை நாற்­பத்­தொரு பிர­தேச செய­லகப் பிரி­வுகள் பெய­ரி­டப்­பட்டு அதி­வி­சேட வர்த்­த­மா­னிகள் மூலம் காலத்­திற்குக் காலம் ஜனா­தி­ப­தி­களால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அவை பற்­றிய விப­ரங்­களை நாம் தெரிந்து வைத்­தி­ருப்­பதன் மூலம் தமிழ் மொழிக்கும் நிர்­வாக உரி­மை­யுள்ள வடக்கு –கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு  அப்­பா­லுள்ள பிர­தேச செய­லகப் பிரி­வுகள் பற்றி அறிந்து கொள்­ளலாம். அர­சி­ய­ல­மைப்பின் 22 (1) உறுப்­பு­ரையின் கீழ் 1999 நவம்பர் மாதம் 12 ஆம் திகதி அதி­வி­சேட வர்த்­த­மானி மூலம் அன்­றைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க பின்­வரும் பன்­னி­ரண்டு (12) பிர­தேச செய­லகப் பிரி­வு­களை இரு மொழிப் பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார். மத்­திய மாகா­ணத்தின் நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் அனைத்து ஐந்து பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளான அம்­பே­க­முவ, நுவ­ரெ­லியா, கொத்­மலை, ஹங்­கு­ரங்­கெத்த, வலப்­பனை ஆகி­ய­வையும் ஊவா மாகா­ணத்தின் பண்­டா­ர­வளை, எல்ல, ஹல்­து­முல்ல, ஹாலி–­எல, அப்­புத்­தளை, பசறை, மீக­ஹ­கி­வுல ஆகிய ஏழுமே அவை­யாகும். குறித்த வர்த்­த­மானி இலக்கம் 1105/25.

தொடர்ந்து 2001.02.14 ஆந் திகதி 1171/15 இலக்கம் கொண்ட அதி­வி­சேட வர்த்­த­மானி மூலம் மேல் மாகா­ணத்தின் கொழும்பு மாவட்­டத்தின் திம்­பி­ரி­கஸ்­யாய மற்றும் கொழும்பு ஆகிய பிர­தேச செய­லகப் பிரி­வு­களை இரு­மொ­ழிப்­பி­ர­தேச செய­ல­கப்­பி­ரி­வு­க­ளாக அன்­றைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா அம்­மையார் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார்.

அவ்­வாறே. 1282/3 இலக்கம் கொண்ட அதி­வி­சேட வர்த்­த­மானி மூலம் 2003.04.07 ஆம் திகதி ஊவா மாகா­ணத்தின் பதுளை, லுணு­கலை, வெலி­மடை, சொர­ணத்­தோட்ட ஆகிய பிர­தேச செய­லகப் பிரி­வு­களும் தென்­மா­கா­ணத்தின் காலி மாவட்­டத்தின் காலி நகர் சூழ் பிர­தேச செய­லகப் பிரிவும், மேல் மாகா­ணத்தின் களுத்­துறை மாவட்­டத்­தின் ­பே­ரு­வளைப் பிர­தேச செய­லகப் பிரிவும் மத்­திய மாகா­ணத்தின் கண்டி மாவட்­டத்தின் அக்­கு­றணை, பன்­வில, தெல்­தோட்டை, பஸ்­பா­கே­கோ­றளை, உட­ப­லாத்த ஆகிய ஐந்தும் வட மேல் மாகா­ணத்தின் புத்­தளம் மாவட்­டத்தின் முந்தல், கல்­பிட்டி, புத்­தளம், வண்­ணாத்­தி­வில்லு ஆகி­ய­வையும் அன்­றைய ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க அம்­மை­யாரால் தமிழ்­மொ­ழியும், சிங்­கள மொழியும் நிர்­வாக உரிமை கொண்ட இரு மொழிப்­பி­ர­தேச செய­லகப் பிரி­வு­க­ளாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

தொடர்ந்து  2012.10.10ஆம் ­தி­கதி 1776/16 இலக்கம் கொண்ட அதி­வி­சேட வர்த்­த­மானி மூலம் மேல் மாகா­ணத்தின் கொழும்பு மாவட்­டத்தின் தெஹிவளை, கல்­கிஸ்ஸை, மத்­திய மாகா­ணத்தின் கண்டி மாவட்­டத்தின் கங்க இஹல கோறளை, கண்டி நகர் சூழ் பிர­தேசம் மற்றும் கங்­க­வட்ட கோறளை, மாத்­தளை மாவட்­டத்­தில் ­மாத்­தளை பிர­தேச செய­ல­கப்­பி­ரிவு ஆகி­ய­வையும், வடமத்­திய மாகா­ணத்­தின்­பொ­லன்­ன­றுவை மாவட்­டத்தின் லங்­கா­புர, வெலி­கந்த ஆகிய இரு பிர­தேச செய­லகப் பிரி­வு­களும் அனு­ரா­த­புர மாவட்­டத்தின் கெக்­கி­ராவ பிர­தேச செய­லகப் பிரிவும் சப்­ர­க­முவ மாகா­ணத்தின் இரத்­தி­ன­புரி, பலாங்­கொடை மற்றும் கேகாலை மாவட்­டத்தின் மாவ­னெல்லை பிர­தேச செய­லகப் பிரிவும் இரு­மொழிப் பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அவற்­றுடன் வடமாகா­ணத்தின் வவு­னியா தெற்கு (சிங்­களம்) பிர­தேச செய­ல­கப்­பி­ரிவும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய பிரதேச செயலகப் பிரிவும் இருமொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளன. குறித்த 1776/16 இலக்க வர்த்தமானி மூலம் இருமொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக அவை பன்னிரண் டையும் பிரகடனப்படுத்தியவர் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதுவரை வர்த்தமானி மூலம் பிரகட னப்படுத்தப்படாத போதும் மேலும் முப் பத்தொரு பிரதேச செயலகப் பிரிவுகள் இருமொழிப் பிரதேச செயலகப் பிரிவுக ளாகத் தகைமை கொண்டவையாக இனங் காணப்பட்டுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்மொழிக்கும் நிர்வாக உரிமை கொண்ட மேற்குறித்த நாற்பத்தொரு பிர தேச செயலகப்பிரிவுகளிலுள்ள அரச அலு வலகங்களினூடாக தமிழ்மொழியிலும் தமது அன்றாடக் கடமைகளை ஆற்றிக் கொள்ளும் உரிமையைப்பெற்று உறுதிப்ப டுத்திக்கொள்ளும் பொறுப்பு அப்பகுதிக ளைச்சேர்ந்த தமிழைத்தாய்மொழியாகக்கொண்டவர்களின் பொறுப்பாகும். அது  உரிமையும் கூட. அந்த மொழியுரிமையை நிறைவேற்றத்தடையாயுள்ள காரணிகள் ஆராயப்பட்டு அவற்றைக்களைய வழி காணப்பட வேண்டும். 

வெறுமனே வாளா திராது தட்டினால் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற வாசகத்தை மனதிலிருத்திச் செயற் படுவது, மொழியுரிமைக்குக் குரல்கொடு ப்பது நமது பொறுப்பாகும்.

த. மனோகரன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49