பயங்கரவாதத்தை விட கொரோனா மிக சக்தி வாய்ந்தது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

12 Feb, 2020 | 02:34 PM
image

புதிய கொரோனா வைரஸ் சீன நகரங்களை பேரழிவிற்குட்படுத்தி உலகெங்கிலும் பல நாடுகளில் பரவுவது “மிகவும் கடுமையான அச்சுறுத்தல்” என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளதுடன் அதன் பாதிப்பை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுள்ளார். 

"எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் விட வைரஸ்கள் மிகவும் சக்திவாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார். 

ஜெனீவாவில்,  400 விஞ்ஞானிகள் மற்றும் பிற நிபுணர்களின் சர்வதேச கூட்டத்தின் பின்னர் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதற்கு 18 மாத காலம் நீடிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ள  நிலையில், அதுவரை இருக்கும் சிகிச்சை முறைகளை கொண்டு கொரோனா வைரஸை கட்டுபடுத்த நாம் செயற்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸிற்கு கொவிட் - 19 (  COVID-19 ) என்று பெயரிடப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ள அவர் இந்த பெயர் ஏனைய  பெயர்களைவிடவும்  துல்லியமாக இருக்கக்கூடும் என்றும் விளக்கினார்.

இதுவரை, கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உயிரிழந்தோர் தொகையானது தற்போது 1,115 ஆக பதிவாகியுள்ளதுடன், பாதிக்கப்பட்டோர் தொகையும் 45,171 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், கொங்கொங்கின் முன்னணி பொது சுகாதார தொற்றுநோயியல் நிபுணர், கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுப்படுத்த முடியாவிட்டால் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு வரை பரவக்கூடும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17