பிரேசிலில் இருந்து கொண்டு வரப்பட்ட 91 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு ஒருகொடவத்ததையில் உள்ள கொள்கலன் தளத்திலிருந்து இந்த கொக்கைன் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சீனி என்ற போர்வையில் பதிவுசெய்து குறித்த போதைப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித் கொள்கலனின் உட்பகுதியிலிருந்து மூன்று பைகளில் குறித்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், பரிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் சுமார் 500 மில்லியன் ரூபா பெறுமதியானதெனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த போதைப்பொருளை மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.