13 ஆண்டுகளுக்கு பின் 'வைட் வோஷ்' ஆனது இந்தியா!

Published By: Vishnu

11 Feb, 2020 | 03:51 PM
image

இந்தியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி 'வைட் வோஷ்' செய்தது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 

இவ்விரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

அதன் பின்னர் இவ்விரு அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஆக்லாந்தில் நடந்த 2 ஆவது ஆட்டத்தில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை தன் வசப்படுத்தியிருந்தது.

இந் நிலையில் ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியானது இன்றைய தினம் வுன்ட்மாங்கானுவில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களை குவித்தது.

ராகுல் சிறப்பாக விளையாடி 113 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களை குவித்தார். 

297 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியானது 47.1 ஓவரில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

நியூஸிலாந்து அணி சார்பில் மார்டின் குப்டீல் 66 ஓட்டங்களையும், ஹென்றி நிக்கலஷ் 80 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 22 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 12 ஓட்டங்களையும், ஜேம்ஸ் நீஷம் 19 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், டொம் லெதம் 32 ஓட்டங்களுடனும், கிரேண்ட் ஹோம் 58 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணியானது ஒருநாள் தொடைர 3:0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணியை 'வைட் வோஷ்' செய்துள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஹென்றி நிகலஷும், தொடரின் ஆட்டநாயகனாக ரோஸ் டெய்யலரும் தெரிவானார்கள்.

இந்திய அணியானது கடந்த 2006/07 ஆம் ஆண்டு காலப் பகுதிக்குப் பின்னர் ஒருநாள் தொடரில் வைட் வோஷ் ஆகியுள்ளமை விசேட அம்சமாகும். 

2006/07 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற தென்னாபிரிக்காவுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணியானது 4:0 என்ற கணக்கில் இழந்திருந்தது. இதில் ஒரு போட்டியானது கைவிடப்பட்டிருந்தது.

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையலான இரண்டு பேடாடிகள் கொண்ட டெஸ்ட் போட்டியின் முதல் போட்டி பெப்ரவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

photo credit :‍ icc

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22