பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சகல திட்டங்களையும் மைத்திரி முன்னெடுத்துள்ளார் - தயாசிறி

Published By: Vishnu

11 Feb, 2020 | 03:02 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - பொதுஜன பெரமுனவுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் 2015 ஆம் ஆண்டின் பின்னர் காணப்பட்டதைப் போன்று ஸ்திரமற்ற அரசாங்கமொன்றை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்று சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் போது சு.க தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இணைத் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று‍ நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

அத்துடன் சு.க , பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய பல கட்சிகள் இணைந்து அமைக்க உத்தேசித்துள்ள கூட்டணியின் சின்னம் தாமரை மொட்டு என தீர்மானிக்கப்பட்டால் அதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. 

அவ்வாறு கூட்டணிக்கு சின்னத்தை வழங்கும் போது அந்த கட்சிக்கே சின்னம் இல்லாமல் போகும். சின்னம் மாத்திரமல்ல பெயரில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று அவர்கள் எண்ணினாலும் எமக்கு எந்த சிக்கலும் இல்லை.

பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சு.க தலைவர் மைத்திரிபால சிறிசேன சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளார். தற்போதுள்ள அனைத்து சு.க பாராளுமன்ற உறுப்பினர்களும் இம்முறை பொதுத் தேர்தலிலும் போட்டியிடுவர். புதிய உறுப்பினர்கள் தொடர்பில் கட்சி தலைவர் தீர்மானிப்பார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19