காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Published By: Digital Desk 4

11 Feb, 2020 | 01:54 PM
image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட  ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மட்டு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 65 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார்.

குறித்த குண்டு தாக்குதலை ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஸஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதிகள் மேற்கொண்டனர். இந்த சம்பவத்தையடுத்து ஸஹ்ரானின் ஊரான காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 64 பேரை ஸஹ்ரானின்  அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற மற்றும் அந்த  அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்தனர். 

இதில் கைது செய்யப்பட்ட 64 பேரையும்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 62 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்  

இதனையடுத்து வாரியபொல பிரதேசத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 3 பேரும் , விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 62 பேருடன் சேர்த்து  65 பேரை   இன்று செவ்வாய்கிழமை (11); நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து  வரப்பட்டு நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர்களை எதிர்வரும் 25 ம் திகதி வரை 14 நாட்கள்   விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10