இலங்கையில் நாளொன்றிற்கு புற்று நோயினால் இத்தனை பேர் இறக்கின்றார்களா?: சுகாதார அமைச்சு தகவல்

Published By: J.G.Stephan

11 Feb, 2020 | 01:52 PM
image

புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதற்கு கொள்கை ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித்த கருனாபிரேம தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் இம்முறை நான், நாங்கள், நீங்கள் என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது. நேற்று (10.02.2020) சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் இந்த தொனிப்பொருளின் கீழான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. 

இந்நிலையில், உலக நாடுகளில் இடம்பெறும் மரணங்களில் புற்றுநோயால் எற்படும் மரணம் 2 ஆம் இடத்தை வகிப்பதாகவும் தெரியவருகிறது. 

இருப்பினும் இம்மரணங்களில் 3 இல் ஒரு பங்கை தடுக்க முடியும். நாளாந்த வாழ்க்கை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்கு முடியும் என்றும், புற்றுநோயைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சினால் மாத்திரம் தனித்து செயற்பட முடியாது எனவும் சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி ஜானகி விதான பத்திரண தெரிவித்திருந்தமையும் குறிப்பிடதக்கது. 

இதில், இலங்கை சற்று உற்றுநோக்குமிடத்து,  நாளாந்தம் 64 புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றர். வருடத்தில் 23,530 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இதே போன்று நாளாந்தம் புற்றுநோயினால் 38 பேர் இறக்கின்றனர். வருடத்தில் இந்த நோயினால் இறப்போரின் எண்ணிக்கை 14,013 ஆகும். சர்வதேச ரீதியில் புற்றுநோயினால் நிமிடம் ஒன்றுக்கு இறப்போரின் எண்ணிக்கை 17 என தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29