கடந்த மாதம் ஈராக்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 க்கும் அதிகமான அமெரிக்க இராணுவத்தினர் மூளை காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க படையினருக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அத்தோடு அமெரிக்க இராணுவத்தினர் எவரும் பலியாகவில்லை, ஆனால் அவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் அமெரிக்க இராணுவத்தினை சேர்ந்த வீரர்கள் சிலருக்கு மூளை காயங்கள் ஏற்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே தற்போது 100 அமெரிக்க இராணுவத்தினருக்கு தாக்குதல் சம்பவத்தின் போது மூளை காயங்கள் ஏற்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்தது.
கடந்த மாதம் ஈரானின் இராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது.
இதற்கு பழி தீர்க்கும் முகமாக ஈரான் , ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து தாக்குல்களை மேற்கொண்டது.
இதில் அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழக்கவில்யையெனினும் அவர்களில் 100 பேருக்கு மூளை காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பென்டகன் அறிவித்தது.
அத்தேடு அவர்களுக்கு தலைவலி, தலைச்சுற்றல், ஒளியின் உணர்திறன் மற்றும் குமட்டல் ஆகியவை மூளையதிர்ச்சிக்கான காயங்களாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் 100 இராணுவ அதிகாரிகள் மூளை காயங்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் அதில் 76 பேர் சிகிச்சை பெற்று தமது பணிக்கு திரும்பியுள்ளதாகவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக ரொய்ட்ரஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM