மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சியும் முன்நகர்த்த வேண்டிய பணிகளும் !; பாகம் - 01

Published By: J.G.Stephan

10 Feb, 2023 | 11:59 AM
image

சி.ஆ.யோதிலிங்கம்

மனிதன் ஒரு சமூ­கப்­பி­ராணி என்­றார் சிந்­த­னை­யாளர் அரிஸ்­ரோட்டில். இதன் அர்த்தம் சமூ­கத்­துடன் இணைந்து கூட்­டா­கவும் தனி­யா­கவும் வாழ்­வ­தே­யாகும். மனிதன் சமூ­க­மாக வாழும் போது தான் கூட்­ட­டை­யா­ளத்­தையும் கூட்­டி­ருப்­பையும் பேணிக் கொள்ள முடியும். அதன் வழி கூட்­டு­ரி­மை­க­ளுக்­காக போரா­டவும் முடியும். ஒரு சமூகம் அதன் அடை­யா­ளத்தின் பேரால் ஒடுக்­கப்­ப­டு­கின்ற போது அதற்கு எதி­ராக கூட்டுச் செயற்­பா­டுகள் மூலம் தான் தனிப்­பட்ட நலன்­க­ளையும் கூட்டு நலன்­க­ளையும் பேணிக் கொள்­ளவும் முடியும். கூட்­டு­ரி­மை­களை போராடி பெற்றுக் கொள்­ளவும் முடியும். இதனால் ஒவ்­வொரு மனி­த­னுக்கும் தனிப்­பட்ட பொறுப்­புகள் இருக்­கின்ற அதேவேளை,  கூட்­டுப்­பொ­றுப்பும் இருக்க வேண்டும். இங்கு கூட்­டுப்­பொறுப்பு என்­பது, சமூக நலன்­க­ளுக்­கான பொறுப்­பே­யாகும். தன் சமூ­கத்தில் ஏனை­ய­வர்­க­ளோடு இணைந்து சமூ­கத்தின் பொது நலன்­க­ளுக்­காக உழைக்க வேண்­டி­யது ஒவ்­வொ­ரு­வ­ருக்­கு­முள்ள தார்­மீக கட­மை­யாகும்.

நான் மலை­யக சமூ­கத்தை சேர்ந்தவ­னல்ல. அதற்கு வெளியில் தன் விடு­த­லைக்­காக போராடும் வட­கி­ழக்கு சமூ­கத்தைச் சேர்ந்தவன். ஆனால், மலை­யக மக்கள் தொடர்­பாக மிகுந்த அக்­க­றை­யு­டை­யவன், முடிந்­த­வரை அவர்கள் தொடர்­பான தேடல்­களை மேற்­கொண்டு வரு­பவன். வடக்கில் குடி­யே­றிய மலை­யக மக்கள் மத்­தியில் புனர்­நிர்­மாணப் பணி­களை மேற்­கொண்­ட­வர்­களில் ஒருவன். எனினும் மலை­யக மக்­களின் அபி­லா­ஷை­களை அவர்கள் அனு­ப­வித்து வெளிப்­ப­டுத்­து­வது போல ஒரு அகநிலை நின்ற ஆக்­கத்­தினை என்னால் கொணர முடி­யாது. எனவே ஒரு புறநிலை­யாளன் என்ற வகையில் எனது கருத்­து­களை பரி­சீ­லிக்­கு­மாறு கேட்டுக் கொள்­கிறேன்.

கருத்­துக்கள் எப்­போதும் முடிந்த முடி­வு­க­ளல்ல, விவா­தங்­க­ளுக்கும் கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கும் உரி­யவை. கருத்­துகள் மோது­கின்ற போதுதான் உண்­மை­களை தரி­சிக்க முடியும். எனவே என்­னு­டைய கருத்­து­க­ளையும் விவா­தத்­துக்கும் கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கும் எடுத்து கொள்­ளு­மாறும் அதே வேளை தவ­று­களை மன்­னிக்­கு­மாறும் கேட்டுக் கொள்­கிறேன்.

மலை­யக மக்கள் வர­லாற்று ரீதி­யாக ஒடுக்­கு­மு­றைக்கு உள்­ளாக்­கப்­பட்டு வரு­கின்­றனர். ஒரே தட­வையில் வர்க்க ஒடுக்கு­முறை, இன ஒடுக்­கு­முறை என்­ப­வற்றை புற­ரீ­தி­யாக எதிர்நோக்­கு­கின்­றனர். அதே வேளை மலை­யக மக்­களில் பெரும்­பான்­மை­யினர் சாதி ரீதி­யான ஒடுக்­கு­முறை, உள்­ளக வர்க்க ஒடுக்­கு­முறை என்­ப­வற்­றுக்கு அக ரீதி­யா­கவும் முகம் கொடுக்­கின்­றனர். எனவே ஒரே சம­யத்தில் இன விடு­த­லையும் வர்க்க விடு­த­லையும் பெற வேண்­டிய நிலைக்கு மலை­யக மக்கள் தள்­ளப்­பட்­டுள்­ளனர். அதா­வது தேச அர­சி­யலை முன்­னெ­டுக்க வேண்­டிய அவர்கள் அதே தரு­ணத்தில் சமூக மாற்­றத்­துக்­கான அர­சி­ய­லையும் முன்­னெ­டுக்க வேண்­டிய கட்­டா­யத்தில் உள்­ளனர். ஒரே நேரத்தில் புற ரீதி­யான ஒடுக்கு முறைக்கும் அக ரீதி­யான ஒடுக்கு முறைக்கும் எதி­ராக போரா­டு­கின்ற போது போராட்ட தந்­தி­ரோ­பா­யங்­களில் அதிக கவனம் எடுக்க வேண்­டிய தேவை இருக்­கின்­றது. ஏனைய தேசங்­களை விட மலை­யக தேசத்­துக்கு இதற்­கான கட்­டாயம் அதி­க­மாக இருக்­கின்­றது. ஏனெனில் மலை­யக மக்­களில் பெரும்­பான்­மை­யினர் அடி­நிலை மட்­டத்தைச் சேர்ந்த தொழி­லா­ளர்­களே! இன விடு­த­லை­யையும் பெற வேண்டும் அதேவேளை அந்த விடு­தலை அடி­நிலை மக்­க­ளையும் போய்ச் ­சேர வேண்டும்.

ஆனால், ஒரு தேசப் போராட்டம் என்­பது அந்த தேசம் புற நிலை­யி­லி­ருந்து வரு­கின்ற ஒடுக்குமுறைக்கு எதி­ரான போராட்­ட­மாகும். இதனால் வர்க்க, சாதி, பிர­தேச நிலைகள் கடந்து தேசத்தின் அனைத்­துப்­பி­ரி­வி­ன­ரையும் இணைக்க வேண்­டிய கட்­டாயத் தேவை இருக்­கின்­றது. அதுவும் சிங்­கள தேசத்­தினால் முற்­றிலும் சூழப்­பட்ட ஒரு தேசம் வெற்­றி­ய­டை­வ­தற்கு தனது முழு ஐக்­கி­ய ­ப­லத்­தையும் காட்­ட­வேண்­டிய நிர்ப்­பந்தம் இருக்­கி­றது. இதனால் தான் அனை­வ­ரையும் இணைத்துக் கொள்ள வேண்­டிய தந்­தி­ரோ­பா­யங்­களை  மலை­ய­கத்தின் முன்­னணி சக்­திகள் கவ­னத்தில் கொள்ளல் வேண்டும்.

எனது இந்­தக் ­கட்­டுரை அக­ஒ­டுக்­கு­முறை பற்றி அதிக கவ­னத்­தினைக் குவிக்­க­வில்லை. மாறாக புற நிலை ஒடுக்­கு­மு­றை­யான இன ஒடுக்­கு­முறை பற்­றியே கவனம் செலுத்­து­கின்­றது.

இன ஒடுக்­கு­முறை தொடர்­பான மலை­ய­கத்தின் இன்­றைய அர­சியல் நிலையையும் எதிர்­கால பணி­க­ளையும் பற்றி முழு­மை­யாக புரிந்து கொள்­வ­தற்கு மலை­யக அர­சி­யலின் வர­லாற்று வளர்ச்சி, அது இன்று வந்­த­டைந்­துள்ள கட்டம் என்­பதை தெளிவாக விளங்கிக் கொள்­வது அவ­சி­ய­மா­ன­தாகும்.

மலை­யக மக்கள் சுமார் 100 வரு­டங்­க­ளாக நீண்ட போராட்­டத்­தினை நடத்தி வரு­கின்­றனர். அவர்கள் அமைப்பு ரீதி­யாக போராட ஆரம்பித்த ஆண்­டாக 1919ஆம் ஆண்­டினை குறிப்­பி­டலாம். இந்த ஆண்டே சேர். பொன்­னம்­பலம் அரு­ணா­ச­லமும் பெரிசுந்­த­ரமும் இணைந்து 'தோட்டத் தொழி­லாளர் சம்­மே­ளனம்' என்ற அமைப்­பினை உரு­வாக்கி மலை­யக மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்­காக குரல் எழுப்­பி­யி­ருந்­தனர். 1919 ஆம் ஆண்­டி­லி­ருந்து 1935 ஆம் ஆண்­டு­வரை மலை­யக அர­சி­யலின் முத­லா­வது கட்டம் எனக் கூறலாம். அன்­றைய கால கட்­டத்தில் கொடூர ஒடுக்கு முறை­யாக இருந்த துண்டு முறை­யினை ஒழிப்­ப­தற்­காக இவர்கள் குரல் கொடுத்­தார்கள் எனக் கூறப்­ப­டு­கின்­றது. ஆனாலும் இக்­கால கட்­டத்­தினை நகர்த்­திய பெருமை நடே­சை­ய­ரையே சாரும். ஏ.ஈ.குண­சிங்­கவின் தொழிற்­சங்­கத்தில் உப தலை­வ­ராக இருந்த அவர் குண­சிங்­கவின் இன­வாத நட­வ­டிக்­கை­களால் அதி­லி­ருந்து விலகி தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கென தனி­யான தொழிற்­சங்­க­மான இலங்கை தோட்டத் தொழி­லாளர் சம்­மே­ள­னத்தை உரு­வாக்கி செயற்­பட்டார். டொன­மூரின் அர­சாங்க சபையில் ஹட்டன் தொகுதி உறுப்­பி­ன­ராக 1936 – 1947 வரை கட­மை­யாற்­றியும் இருந்தார். தோட்­டங்­க­ளுக்கு வெளியார் செல்லக் கூடாது என்ற கட்­ட­ளை­யையும் மீறிச் சென்று தொழி­லா­ளர்­க­ளுக்கு விழிப்­பூட்­டினார்.  

1935 – 1947 வரை மலை­யக அர­சி­யலின் இரண்­டா­வது கால கட்டம் எனக் கூறலாம். இக்­கால கட்டம் இட­து­சாரிக் கட்­சிகள் மலை­யக மக்கள் மத்­தியில் ஆதிக்கம் செலுத்­திய கால கட்­ட­மாகும். இட­து­சாரி­களே மலை­ய­கத்தில் வேலை நிறுத்தம் உட்­பட பல போராட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர்­க­ளாவர். இவர்­க­ளினால் நடத்­தப்­பட்ட முல்­லோயா போராட்டம் புகழ் பூத்த ஒன்­றாகும். பிரஸ்­கேடில் சம்­பவம் மலை­யக அர­சி­யலை மைய­மாக வைத்தே நிகழ்ந்­தி­ருந்­தது. (பிரஸ்­கேடில் இடது சாரி தொழிற்­சங்க நட­வ­டிக்­கை­களை மலை­ய­கத்தில் நகர்த்­து­வ­தற்கு முன்­னோ­டி­யாக திகழ்ந்த ஒரு ஆங்­கிலத் தோட்­டத்­து­ரை­யாவார்) மலை­ய­கத்தின் முதல் போராளி கோவிந்­தனும் முல்­லோயா போராட்­டத்­தி­லேயே மர­ண­மானார். 1947 வரை மலை­யக அர­சி­யலில் இன ஒடுக்­கு­முறை பெரித­ாக வளர்ச்­சி­ய­டைந்­தி­ருக்­க­வில்லை. வர்க்க ஒடுக்கு முறையே பிர­தா­ன­மாக தொழிற்­பட்­டது. இதனால் நடே­சை­யரும் இடதுசாரி­களும் வர்க்க ஒடுக்­கு­மு­றை­க­ளி­லேயே அதிக கவனம் செலுத்­தி­யி­ருந்­தனர். ஆட்சி அதி­காரம் ஆங்­கி­லே­யரின் கைகளில் இருந்­த­தினால் இன ஒடுக்கு முறை பெரிய­ள­வுக்கு வளர்ச்­சி­ய­டை­ய­வில்லை. ஆனாலும் கொழும்பு நக­ரத்தில் இந்­திய வம்­சா­வளி­யி­ன­ருக்கு எதி­ரான இன­வாதம் 1920 களி­லேயே ஆரம்­பித்­து­விட்­டது.

அநகாரிக ­தர்­ம­பால இந்­திய வர்த்­த­கர்­க­ளுக்கு எதி­ரான இன­வா­தத்­தினைத் தொடக்கி வைத்தார். ஏ.ஈ. குண­சிங்க கொழும்பில் வாழும் இந்­தியத் தொழி­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான இன­வா­தத்­தினை தொடக்கி வைத்தார். அரச அதி­காரம் சிங்­க­ளத்­ த­லைவர்­க­ளிடம் இல்­லா­த­தினால் அது பெரிய­ள­வுக்கு நடை­முறை செயற்­பாட்டில் எழுச்­சி­ய­டை­ய­வில்லை. எனினும் இந்தப் போக்கு நீண்ட காலம் நிலைக்­க­வில்லை. 1931 இல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட டொனமூர் அர­சியல் யாப்­புடன் இன­வாத சக்­திகள் அதி­கா­ரத்தைக் கையி­லெ­டுத்துக் கொண்டு தமது செயற்­பாட்­டினை முடுக்கி விட்­டனர். தமக்குக் கிடைத்த அரை குறை அதி­கா­ரத்தை வைத்துக் கொண்டே நக­ரத்தில் பணி­யாற்­றிய இந்­திய வம்­சாவளி அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள், போக்­கு­வ­ரத்து தொழி­லா­ளர்கள் போன்­றோரை பத­வி­யி­லி­ருந்து நீக்­கினர். இந்­நி­லையில் இவற்­றுக்கு முகம் கொடுப்­ப­தற்­காகத் தான் நேருவின் வழி­காட்­டலில் இலங்கை– இந்­திய காங்­கிரஸ் 1939 இல் உரு­வாக்­கப்­பட்­டது. 1940 இல் இத­னு­டைய தொழிற்­சங்­க­மான இலங்கை – இந்­தியர் தொழிற்­சங்கம் மலை­ய­கத்தில் பணி­யாற்ற ஆரம்­பித்­தது.

இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கு எதி­ரான இன­வாதம் கொழும்பில் ஆரம்­பித்­தாலும் இக்­கா­லத்தில் மலை­ய­கத்தில் முற்­று­மு­ழு­தாக அது இடம் பெற­வில்லை எனக்­கூற முடி­யாது. 1937 ஆம் ஆண்டு கொண்­டு­ வ­ரப்­பட்ட உள்ளூ­ராட்சி சபை சட்டம் இதற்கு நல்ல உதா­ர­ண­மாகும். பண்டார­நா­யக்கா உள்ளூ­ராட்சி அமைச்­ச­ராக இருந்தபோது கொண்டு வரப்­பட்ட இச்­சட்­டத்தின் மூலம் உள்ளூ­ராட்சித் தேர்தலில் வாக்­கா­ள­ராகும் உரிமை மலை­யக மக்­க­ளுக்கு இல்­லாமல் செய்­யப்­பட்­டது. இதை விட அர­சாங்க சபைத் தேர்தல்­களில் கூட மலை­யக மக்­களின் வாக்கு வீதத்­தினைக் குறைப்­ப­தற்­காக வாக்­கு­ரி­மைச்­ சட்­டத்தில் பல கட்­டுப்­பா­டுகள் 1936 தேர்தலின் போது கொண்­டு­வ­ரப்­பட்­டன.

மூன்­றா­வது கால கட்டம் 1947 ஆம் ஆண்­டி­லி­ருந்து 1977 ஆம் ஆண்டு வரை வரு­கின்­றது. 1947 இன் சோல்­பரி அர­சியல் யாப்பு, அதன் பின்னர் 1948 இல் வழங்­கப்­பட்ட சுதந்­திரம் என்­ப­வற்றின் மூலம் இலங்­கையின் ஆட்­சி­ய­தி­காரம் முழு­மை­யாக சிங்­களத் தலை­மை­களின் கைக­ளுக்கு சென்றது. ஆங்­கி­லே­யர்கள் இலங்கைத் தீவின் பன்­முக சமூ­கத்­தன்­மையை கவ­னத்­தி­லெ­டுக்­காமல் ஒற்­றை­யாட்சி அர­சி­யலை அறி­மு­கப்­ப­டுத்தி விட்டுச் சென்­றனர். பல்­வேறு இனங்­களும் நியா­ய­மான வகையில் அதி­கா­ரத்தை பங்­கிட்டுக் கொள்ளும் தன்மை அதி­காரக் கட்­ட­மைப்பில் இருக்­க­வில்லை.

சிங்­களத் தலைமை தென் இலங்­கையில் மலை­யக மக்­களின் அர­சியல் அடை­யா­ளத்­தையே இல்­லாமல் செய்யும் வகையில் நட­வ­டிக்­கை­களை எடுக்கத் தொடங்­கியது. இரு பிர­ஜா­வு­ரி­மை ­சட்­டங்­களின்  மூலமும் வாக்­கு­ரிமை சட்­டத்தின் மூலமும் மலை­யக மக்­களின் அர­சியல் அடை­யா­ளத்தை இல்­லாமல் செய்­தது. மலை­யக மக்கள் பல­வந்­த­மாக தொழிற்­சங்க அர­சி­ய­லுக்குள் மட்டும் குறுக்­கப்­பட்­டனர். மறு­பக்­கத்தில் அரச இயந்­தி­ரத்தை முழு­மை­யாக சிங்­கள மய­மாக்கும் முயற்சி நடை­பெற்­றது. 1950 இல் தேசியக் கொடி, 1956 இன் தனிச்­சிங்கள சட்டம் என்­பன சிங்­கள மய­மாக்கல் செயற்­பாட்டில் பிர­தான விட­யங்­க­ளாக இருந்­தன. ஏனைய இனங்­க­ளுக்கு பாது­காப்­பாக சோல்­பரி யாப்பில் காணப்­பட்ட 29 ஆவது பிரிவு, கோம­றைக்­கழகம் என்­பன மலை­யக மக்கள் விட­யத்தில் சிறி­த­ளவு பாது­காப்பைக் கூட கொடுக்­க­வில்லை. பிரஜா­வு­ரிமை பிரச்­சி­னையில் உலக நீதிக்கு புகழ் பெற்ற கோம­றைக்­க­ழ­கமும் கையை விரித்­தி­ருந்­தது.

இந்த அர­சியல் அடை­யாளப் பறிப்பின் உச்ச நிலை அம்­ச­மா­கவே 1964 இல் கைச்­சாத்­தி­டப்­பட்ட சிறிமா  – சாஸ்­திரி ஒப்­பந்தம் அமைந்­தது. மலை­யக மக்­களின் சம்­ம­த­மில்­லா­ம­லேயே ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்டு அரை­வாசி இந்­திய வம்­சா­வளி மக்கள் நாடு கடத்­தப்­பட்­டனர். 1974 இல் கைச்­சாத்­தி­டப்­பட்ட சிறிமா  – இந்­திரா ஒப்­பந்­தமும் இந்த நாடு­க­டத்­தலில் பங்­காற்­றி­யி­ருந்­தது. இந்த நாடு ­க­டத்­தலை பச்­சை­யான இன அழிப்பு எனலாம்.

ஏற்­க­னவே டொனமூர் காலத்தில் நகர்ப்­பு­றங்­களில் பணி­யாற்­றி­ய­வர்கள் வேலை நீக்­கப்­பட்­டதால் சுய­மாக வெளியே­றினர். பின்னர் வந்த ஒப்­பந்­தத்தின் மூலம் பல­வந்­த­மாக நாடு­க­டத்­தப்­பட்­டனர். இந்த இருவகை வெளியேற்­றங்­க­ளினால் 1940 களில் இரண்­டா­வது பெரிய இன­மாக 13 வீத­மாக இருந்த இந்­திய வம்­சா­வ­ளி­யினர் 1981 இல் 5.5 வீத­மாக சுருக்­கப்­பட்­டனர்.

சுதந்­திரம் கிடைத்­த­வு­ட­னேயே மலை­யக மக்­களின் அர­சியல் அடை­யா­ளத்தை பறித்த ஆட்­சி­யா­ளர்கள் 1972 இன் பின்னர் மலை­யக மக்­களின் கூட்­டி­ருப்­பையும் இல்­லாமல் செய்யும் நட­வ­டிக்­கைகளில் ஈடு­பட்டனர். இதற்­காக மேற்­கொண்ட பிர­தான நட­வ­டிக்­கையே மண் பறிப்­பாகும். 1972 இல் கொண்­டு­வ­ரப்­பட்ட காணி சீர்­தி­ருத்தச் சட்டம், 1975 இல் காணி உச்­ச­வரம்பு சட்டம் என்­பன மலை­யக மக்­களை அவர்கள் வள­மாக்­கிய நிலங்­க­ளி­லி­ருந்து அப்­பு­றப்­படுத்­தின. அத் தோட்­டங்கள் பெருந்­தோட்டத்­ து­றை­யுடன் எந்­த­வித தொடர்­பு­மற்ற சிங்­கள கிரா­ம­வா­சி­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டன. இதற்கு எதி­ரான போராட்­டத்­தி­லேயே டெவன் தோட்டப் போராளி சிவனு லட்­சு­மணன் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

இலங்கை – இந்­தியர் காங்­கி­ரஸும் பின்னர் பெயர் மாற்­றப்­பட்ட இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரஸும் இக்­கா­ல­கட்­டத்­தினை நகர்த்­திய முக்­கிய அமைப்­பாக இருந்­தன. தொண்­டமான் பிர­தான தலை­வ­ராக விளங்­கினார். ஏனைய பல தொழிற்­சங்­கங்கள் தொழிற்­பட்ட போதும் இன அர­சி­யலை நகர்த்­திய அமைப்­பாக இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ர­ஸி­னையே குறிப்­பி­டலாம். மலை­யக ஆய்­வாளர் காதர் இலங்கை –- இந்­தியர் காங்­கி­ர­ஸி­னையே மலை­ய­கத்தின் முத­லா­வது தேசிய இயக்­க­மாகக் குறிப்­பி­டு­கின்றார். 1947 தேர்தலில் இவ்­வ­மைப்பின் சார்பில் 6 பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்­றத்துக்கு தெரிவு­செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

நான்­கா­வது கால­கட்டம் 1977 தொடக்கம் 2009 வரை­யி­லான கால­கட்­ட­மாகும். இக்­கா­ல­கட்­டத்தில் நீண்ட போராட்­டத்தின் வாயி­லாக மலை­யக மக்­க­ளுக்கு அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் கிடைத்­தது. 1977 ஆம் ஆண்டு தேர்தலில் தொண்­டமான் நுவ­ரெ­லியா  மஸ்­கெ­லியா தொகு­தி­யி­லி­ருந்து மூன்­றா­வது அங்­கத்­த­வ­ராக தெரிவு செய்­யப்­பட்டார்.

அதேவேளை இக்­கா­ல­கட்­டத்தில் தான் வட கிழக்கில் தனி­நாட்டு போராட்­டமும் முனைப்­புடன் தொழிற்­படத் தொடங்­கி­யது. 1977 தேர்தலில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி தமி­ழீ­ழத்­துக்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு என பிர­சாரம் செய்து போட்­டி­யிட்டு வட­கிழக்­கி­லுள்ள 19 தமிழ் தேர்தல் தொகு­தி­களில் 18இனைக் ­கைப்­பற்­றி­யது. அதேவேளை 1977, 1983 காலங்­களில் இரு இன அழிப்­பு­ சம்­ப­வங்­களும் இடம் பெற்­றன. இதில் வட­கி­ழக்கு தமி­ழர்கள் மட்­டு­மல்ல மலை­யகத் தமி­ழர்­களும் அழிக்­கப்­ப­ட்டனர். 1983 இலி­ருந்து 2009 வரை வட  கிழக்கில் பாரா­ளு­மன்ற அர­சி­ய­லுக்கு முதன்­மை­யான இடம் இல்­லாமல் போனது. விடு­தலை இயக்­கங்கள் முதன்­மை­யான  இடத்­தினைப் பெற்றுக் கொண்­டன. மலை­யக இளை­ஞர்கள் பலரும் இயக்­கங்­களில் இணைந்து கொண்­டனர்.

வட- கிழக்கு நிலை­மைகள் மலை­ய­கத்­திலும் விழிப்­பு­ணர்­வு­களைக் கொண்டு வரத் தொடங்­கின. மலை­யகம், மலை­யக தமிழர் என்ற எண்ணக் கருக்­களும் வளர்ச்­சி­ய­டையத் தொடங்­கின. மலை­யக விடுதலை­யை மைய­மாக வைத்த  தீவிரவாத இயக்­கங்­களும் மலை­ய­கத்தில் தோன்­றின.

பாரா­ளு­மன்ற அர­சி­யலில் இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரஸுடன் போட்டி போடக் கூடி­ய­ அள­வுக்கு மலை­யக மக்கள் முன்­ன­ணியும் எழுச்­சி­ய­டைந்­தது. 1978இல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட விகி­தா­சா­ர­ பி­ர­தி­நி­தித்­துவம் பாரா­ளு­மன்­றத்­துக்­கான மலை­யகப் பிர­தி­நிதி­க­ளையும் அதி­க­ரிக்க செய்­தது. தொழிற்­சங்க அர­சி­யலில் இருந்து சற்று விடு­பட்டு தேசிய இன அர­சி­யலை நோக்கி மலை­யக அர­சியல் நகரத்தொடங்­கி­யது. மலை­யகம் எமது தாயகம் நாம் ஒரு தேசியம் என்ற கோஷங்கள் எழுச்­சி­ய­டைந்­தன. மலை­ய­கத்­துக்­கான அதி­கார அலகு கோரிக்­கையும் முன்­வைக்­கப்­பட்­டது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04