பகி­டி­வ­தையால் 2019 இல் கல்­வியை இடை­நி­றுத்­தி­யுள்ள மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?: நியாயம் பெற்றுக்கொடுக்க விசேட குழு

Published By: J.G.Stephan

11 Feb, 2020 | 10:11 AM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

இல­வசக்  கல்­வியை  பெற்றுக் கொள்ளும் மாண­வர்கள்   எவ்­வித  பாதிப்­பு­மின்றி சுதந்­தி­ர­மாக கற்றல் நட­வ­டிக்­கை­களை  முன்­னெ­டுப்­ப­தற்­கான சூழலை ஜனா­தி­பதி துரி­த­மாக முன்­னெ­டுப்பார். பகி­டி­வ­தையால்  2019ஆம் ஆண்டு மாத்­திரம்  பல்­க­லைக்­க­ழகக் கல்­வியை   இடை­நி­றுத்­தி­யுள்ள 2000  மாண­வர்­க­ளுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்­ப­தற்கு விசேட குழு  நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது . என தகவல் மற்றும் தொடர்­பாடல்  உயர்­கல்வி அமைச்சர்  பந்­துல  குண­வர்­தன தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று  திங்­கட்­கி­ழமை இடம் பெற்ற  ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்  

வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கு வேலை­வாய்ப்­பினை    வழங்­கு­வ­தற்­கான    செயற்­திட்ட த்திற்கு    விண்­ணப்பம்    செய்­வ­தற்­கான     வய­தெல்லை    35 லிருந்து 45 வய­தாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­துடன்,  விண்­ணப்­பங்­களை விண்­ணப்­பிக்கும் கால எல்லை  இம்­மாதம்  20 ஆம்  திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.      நேர்­மு­கப்­ப­ரிட்­சையின் ஊடாக  தெரிவு  செய்­யப்­படும்  விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு ஒரு வருட கால  பயிற்சி  வழங்­கப்­படும், பயிற்­சியின் போது 20 ஆயிரம் ரூபா மாதக் கொடுப்­ப­னவு  வழங்­கப்­படும்.

பயிற்சி  முழுமை  பெற்­றதும்  உரிய பிர­தே­சத்தில் உள்ளோர் அந்த பிர­தே­சத்­தி­லேயே  5 வருட கால நிரந்­தர சேவையில் அமர்த்­தப்­ப­டுவர். எக்­கா­ர­ணி­களை  கொண்டும்  இட­மாற்றம் வழங்க்­கப்­ப­ட­மாட்­டாது.     ஜனா­தி­ப­தியின் கொள்­கைக்கு அமைய 55 ஆயி­ரத்­திற்­கும   அதி­க­மான  வேலை­யற்ற  பட்­ட­தா­ரி­க­ளுக்கு   நிரந்­தர  தொழில்­வாய்ப்­புக்கள்    பெற்றுக் கொடுக்­கப்­படும்.

திறந்த  பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில்  மாண­வர்கள் மத்­தியில்  தவ­றான  கருத்­துக்கள் ஒரு  தரப்­பி­னரால்  குறிப்­பி­டப்­பட்டு வரு­கின்­றன.  அரச பல்­க­லைக்­க­ழக   நிர்­வாக முறை­மைக்கும் திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கு­மி­டையில்  பாரிய வேறு பாடுகள்  காணப்­ப­டு­கின்­றன.  அர­சாங்கம்  பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின்  அடிப்­படை  பிரச்­சி­னை­க­ளுக்கு   சிறந்த  தீர்­வினை நியா­ய­மான முறையில் பேச்­சு­வார்த்­தையின் ஊடாக  பெற்றுக் கொள்ள  நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு  வரு­கின்­றது. இதனை  இல்­லாது செய்­யவே  ஒரு  தரப்­பினர் முயற்­சிக்­கின்­றார்கள்

பல்­க­லைக்­க­ழ­கத்தில் இடம் பெறும் பகி­டி­வ­தை­யினால்  தேசிய  பல்­க­லைக்­க­ழக கல்வி முறை­மை­யினை   வெறுத்து பல   மாண­வர்கள்  வெளி­நாட்டு   பல்­க­லைக்­க­ழ­கங்­களில்  கல்வி  நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்­றார்கள். இந்­நி­லைமை மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும். இல­வச கல்­வி­யனை பெறும் மாண­வர்கள்    எவ்­வித அச்­ச­மு­மின்றி  கற்றல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும்  சூழலை   ஜனா­தி­பதி  ஏற்­ப­டுத்திக் கொடுப்பார்.

பகி­டி­வ­தை­யினால்  பாதிக்­கப்­பட்டு கடந்த ஆண்டு மாத்­திரம் 2000 மாண­வர்கள்  பல்­க­லைக்­க­ழக கல்­வி­யினை இடை­நி­றுத்­தி­யுள்­ளார்கள். இது  பாரி­ய­தொரு அநீதியாகும்.  முறையற்ற  கலாசாரத்தினால் ஒரு  கல்வி சமூகததின்  எதிர்காலமே  இல்லாதொழிக்கப்பட்டுள்ளன.  இம்மாணவர்களுக்கு நியாயம்   பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.  இதற்காகவே  ஓய்வுப் பெற்ற  நீதியரசர் தலைமையில்  குழு நியமிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட மாணவர்கள்  குழுவினர்  சாட்சியமளித்து  நீதியை பெற்றுக்கொள்ள முடியும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19