யாழ்ப்பாணம் சபாபதிபிள்ளை பிரதேசத்தில் இடம்பெயர்ந்தவர்கள் முகாம் அருகே பெண்ணொருவரின் உடலில் தீ பற்றியமையினால் பலத்த காயங்களுக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் முகாமின் அருகில் காணப்பட்ட குப்பைகளுக்கு தீயிடும் போதே குறித்த தீ விபத்தானது இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் அப்பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 23 வயது இளம் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிர தீக்காயங்களுக்குள்ளான குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.