வட மாகாணத்தில் 80 அதிபர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

Published By: Digital Desk 4

10 Feb, 2020 | 04:52 PM
image

வட மாகாணத்திற்கான புதிதாக 80 அதிபர்களுக்கான நியமனமும் சேவை நிலையங்கள் வழங்கும் வைபவமும் இன்று (10,02,2020 ) யாழ். இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. 

குறித்த நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டு அதிபர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கினார். 

வடமாகாணத்தின் கல்வியமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அவருடன் வடமாகாணத்தின் பிரதம செயலாளர், கல்வித் திணைக்கள அதிகாரிகள், கல்வித் திணைக்கள பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆளுநரின் செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர், ஊடக செயலாளர், ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர். 

இதன் போது கருத்து தெரிவித்த வடக்கு ஆளுநர்,

பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றிய நீங்கள் பாடசாலை நிர்வகிக்கின்ற பாடசாலையை முகாமைத்துவம் செய்பவர்களாக மாற்றப்பட்டுள்ளீர்கள். இந்த பணி என்பது மாகாணத்திற்கு கல்விச் செயற்பாட்டிலே மிக முக்கியம் வாய்ந்த விடயமாகப் பார்க்கப்படுகின்றது.

நாங்கள், எங்களுடைய பெற்றோர்கள் படித்த காலத்திலிருந்த கல்விச் சமூகம் வேறு மாணவர்களுடைய செயற்பாடுகள் வேறு. இன்று அவர்களுடைய செயற்பாடுகள் வித்தியாசமாகவே அமைகின்றது. எந்த ஒரு விடயத்தினையும் பெற்றோர்கள் ஊடாகவும் ஆசிரியர்கள் ஊடாகவும் பாடநூல்களினூடாவும் அறிந்து கொள்ளும் மாணவர் சமூகமே காணப்பட்டது. இன்று பெற்றோருக்குத் தெரியாமல் ஆசிரியருக்குத் தெரியாமல் தங்களுக்கு விரும்பியவற்றை அணுகிக் கொள்கின்ற தொழில்நுட்ப முன்னேற்ற வசதியிலே மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அதற்கான எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாத சூழல் இன்றைய இந்த சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் அத்தனை தொழில்நுட்ப வசதிகளையும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பெற்றுக்கொள்ளக் கூடிய நிலை காணப்படுகின்றது. இதனால் பிள்ளைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை, மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை, பல்கலைக்கழகத்தினை நிர்வகிக்க முடியவில்லை, இதனால் மாணவர்கள் விபரீதமான முடிவுகளை நோக்கிச் செல்கின்ற நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் இது ஒரு பாரிய சவாலாக அமைகின்றது. 

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். ஆசிரியர்களும் அதிபர்களும் பாடசாலை கட்டுப்பாடுகளையும் ஒழுங்குகளையும் வழிநடத்துபவர்களாக இருப்பதோடு மட்டுமல்லாது உதாரணமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் மாணவர்கள் கேள்வி கேட்கும் நிலை ஏற்படும். 

இலங்கையில் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் சமூகமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. 

ஆனால் இன்று இளைய சமூகம் எங்கே போய்க்கொண்டு இருக்கின்றது, அவர்களை எப்படிக்கட்டுப்படுத்துவது என்பது புரியாத விடயமாகவும் அமைவதோடு இதுவே தொடர்ந்தால் சமூகத்தின் நிலை கேள்விக்குறியாகின்ற நிலையும் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. 

பாடசாலைகளிலிருந்து வெளியேறும் மாணவர்களே பல்கலைக்கழகம் செல்கின்றனர்  பல்கலைக்கழகம் சென்றவர்கள் பின்னர் பாடசாலைக்கு ஆசிரியர்களாக வருகின்றனர். இது ஒரு சுற்று வட்டமாகும். இந்த விடயத்தை உணர்ந்தவர்களாக, இந்த சமூகத்தை மாற்றியமைப்பவர்களாக, மாணவர் சமூகத்தை நல்வழிக்கு மீட்பவர்களாகக் கல்வியை வளர்க்கின்றவர்களாக மாற வேண்டும். 

இன்று பெண்கள் சுதந்திரமாக வைத்தியசாலைக்குச் செல்ல முடிகின்றதா? சுதந்திரமாகக் கல்வி நிலையங்களுக்குச் செல்ல முடிகின்றதா? சுதந்திரமாக அலுவலகங்கள் செல்ல முடிகின்றதா? பிள்ளைகள் கல்வியைச் சரியான மனநிலையில் கற்கின்றார்களா? போன்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் ஏற்படுகின்றது. எனவே கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி, அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். பாடசாலை, பாடசாலை சமூகம் ஆகிய இரண்டையும் இணைத்து பணியாற்றும் பாரிய பொறுப்பு அதிபர்களுக்குக் காணப்படுகின்றது. என்பதனை நினைவுபடுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58