சுதந்திர தினத்தில் தமிழர்களை அரசாங்கம் திட்டமிட்டு அந்நியப்படுத்தி விட்டது: ஐ.தே.க. வின் உப தலைவர் ரவி கருணாநாயக்க

Published By: J.G.Stephan

10 Feb, 2020 | 04:33 PM
image

சுதந்­திர தின நிகழ்வில் தமிழிழ் தேசிய கீதம் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­மை­யா­னது தமிழ் மக்­களை திட்­ட­மிட்டு அந்­நி­யப்­ப­டுத்­தி­ய­தா­கவே கருத முடி­கி­றது. 1949ஆம் ஆண்டு இடம்­பெற்ற இலங்­கையின் முத­லா­வது சுதந்­திர தின நிகழ்வில் கூட தமிழ் மற்றும் சிங்­கள மொழி­களில் தேசிய கீதம் பாடப்­பட்­டுள்­ளது. இதற்­கான ஆதா­ர­மாக அன்றைய அழைப்­பிதழ் சான்று பகர்­கின்­றது என ஐக்­கிய தேசிய கட்­சியின் உப தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார். 

வீர­கே­சரி பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அந்த செவ்வி வரு­மாறு : 

கேள்வி : சுதந்­திர தின கொண்­டாட்­டங்­களின் போது தமிழ் மொழி­யிலும் தேசிய கீதம் பாடப்­பட வேண்டும் என்று கடந்த அர­சாங்­கத்தால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட விடயம் புதிய அர­சாங்­கத்தால் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் உங்கள் நிலைப்­பாடு? 

பதில் : நாம் இலங்­கையர் என்ற வகையில் நாட்டின் தனித்­துவத் தன்­மையை பற்றி பேசும் போது அனைத்து இன மக்­களும் ஒன்று என்றே கூறு­கின்றோம். அவ்­வா­றி­ருக்­கையில் ஏன் இந்த அர­சாங்­க­தத்தால் இவ்­வா­றா­ன­தொரு தீர்வு எடுக்­கப்­பட்­டது என்­பது கேள்­விக்­கு­றி­யாகும். இலங்­கையர் என்ற வகையில் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என்­ப­தற்­காக ஐக்­கிய தேசிய கட்சி இதனை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது. ஏன் எதற்­காக அர­சாங்கம் அதனை புறக்­க­ணித்­தி­ருக்­கி­றது என்­பது எமக்கும் விளங்­க­வில்லை. 

கேள்வி : தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடும் முறை­மையை ஐக்­கிய தேசிய கட்சி நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருந்­தாலும் தற்­போ­தைய அர­சாங்கம் அதனை புறக்­க­ணிப்­பது தொடர்பில் ஜனா­தி­ப­திக்கோ அல்­லது அர­சாங்­கத்­துக்கோ அழுத்­தங்­களை பிர­யோ­கித்­த­தாகத் தெரி­ய­வில்­லையே? 

பதில் : இல்லை. நாம் அர­சாங்த்­திடம் வலி­யு­றுத்­தினோம். பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­துக்கும் கொண்டு சென்றோம். எனினும் அர­சாங்கம் எத­னையும் கவ­னத்தில் கொள்­ள­வில்லை. 

1949ஆம் ஆண்டு நடை­பெற்ற சுதந்­திர தின நிகழ்­வுக்­கான அழைப்­பி­தழில் தேசிய கீதம் தமி­ழிலும் சிங்­க­ளத்­திலும் பாடப்­படும் என்று கூறப்­பட்­டுள்­ளது. சுதந்­திரம் பெற்­ற­வுடன் கிடைக்கப் பெற்ற வரப்­பி­ர­சா­தங்கள் தற்­போது நீக்­கப்­பட்­டுள்­ளது. 

கேள்வி : ஐ.தே.க. தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச ஆகி­யோ­ருக்­கி­டையில் காணப்­படும் முரண்­பா­டு­க­ளுக்கு தீர்வு காணப்­பட்­டுள்­ளதா? தற்­போது ஐ.தே.க. இரு குழுக்­க­ளாக பிரிந்து செயற்­ப­டு­கி­றது. இவ்­வா­றான முரண்­பா­டு­க­ளுடன் எவ்­வாறு பொதுத் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்கப் போகி­றீர்கள் ? 

பதில் : முரண்­பா­டுகள் இருக்­கின்­றது என்­பது ஊட­கங்­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஒன்­றாகும். ஆனால் அர­சியல் கட்சி எனும் போது சில முரண்­பா­டுகள் ஏற்­ப­டலாம். அது சாதா­ரண விட­ய­மாகும். ஆனால் இங்கு அவ்­வா­றா­ன­தொரு பிரச்­சினை இல்லை. கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தா­விலும், எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்­திலும், பாரா­ளு­மன்­றத்­திலும் தினமும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­புக்­களை நடத்­து­கின்றோம். இதனை இரு குழுக்­க­ளாக பிரிந்து செயற்­ப­டு­வ­தாகக் கூற முடி­யாது. இது ஊட­கங்­களின் சித்­த­ரிப்­பாகும். 

கேள்வி : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மையில் பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு நீங்கள் தயா­ராக உள்­ளீர்­களா? 

பதில் : இங்கு சுட்­டிக்­காட்ட வேண்­டிய விடயம் ரணில், கரு, சஜித், ரவி என்ற அனை­வரும் ஒன்று தான். எனினும் நாம் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதை இல­கு­ப­டுத்­து­வ­தற்­காக பொறுப்­புக்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளன. 

கேள்வி : ஐ.தே.க. தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏன் சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொள்­ள­வில்லை ? 

பதில் : இது அவ­ரிடம் கேட்க வேண்­டிய கேள்­வி­யாகும். என்னால் இந்த கேள்­விக்கு பதி­ல­ளிக்க முடி­யாது. 

கேள்வி : அவ்­வா­றென்றால் அவர் சுதந்­திர தினத்தை புறக்­க­ணித்­துள்­ளாரா? 

பதில் : இல்லை. கலந்து கொள்­ள­வில்லை என்­ப­தற்­காக புறக்­க­ணித்­து­விட்­ட­தாகக் கூற முடி­யாது. 

கேள்வி : அமைக்­கப்­ப­ட­வுள்ள புதிய கூட்­ட­ணிக்கு யானை சின்னம் பெரும்­பா­லாேனாரால் முன்­மொ­ழி­யப்­பட்டால் நீங்கள் அதற்கு இணங்­கு­வீர்­களா? 

பதில் : ஆம். நிச்­ச­ய­மாக இணக்கம் தெரி­விப்போம். ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பி­ன­ராக இருந்து கொண்டு யானை சின்­னத்தை புறக்­க­ணிக்க முடி­யாது. இப்­போதும் யானை சின்­னத்தில் தான் போட்­டி­யிட வேண்டும் என்­பதே பல­ரது நிலைப்­பா­டா­க­வுள்­ளது. இதுவே அனை­வரும் நன்­றாக அறிந்த சின்­ன­மு­மாகும். 

தற்­போது நடை­பெ­ற­வுள்­ளது பொதுத் தேர்­த­லாகும். எனவே இதில் சின்னம் ஒரு பிரச்­சி­னை­யா­காது. எனினும் ஜனா­தி­பதித் தேர்­தலில் பல கட்­சி­க­ளுடன் இணைந்து கூட்­ட­ணி­யாக போட்­டி­யிட்­டதால் அன்னம் சின்னம் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 

கேள்வி : ஐ.தே.க.வுக்குள் எழுந்­துள்ள முரண்­பா­டுகள் கார­ண­மாக அண்­மையில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி தனித்து போட்­டியிடுவது குறித்து சிந்­திக்­க­வுள்­ள­தாகக் கூறி­யது. இது குறித்து உங்கள் நிலைப்­பாடு? அவ்­வாறு அவர்கள் தனித்து போட்­டி­யிட்டால் நுவ­ரெ­லியா போன்ற மாவட்­டங்­களில் ஐ.தே.க.வுக்கு வாக்கு வீதம் குறை­வ­டை­யு­மல்­லவா? 

பதில் : அவர்கள் தனித்து போட்­டி­யிட தீர்­மா­னித்தால் அதனால் எமக்கு எந்த பிரச்­சி­னையும் இல்லை. தமிழ் முற்­போக்கு கூட்­டணி மூன்று கட்­சி­களை உள்­ள­டக்­கி­யது. அதில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பழனி திகாம்­ப­ரத்­துக்கு மாத்­தி­ரமே அதிக வாக்­குகள் உள்­ளன. எவ்­வா­றி­ருப்­பினும் அனை­வரும் ஒன்­றி­ணைந்து தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என்று நாம் எதிர்­பார்க்­கின்றோம். 

கேள்வி : கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஐக்­கிய தேசிய கட்­சியின் தீர்­மா­னங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கி­யுள்­ளது. எனினும் அவர்கள் எதிர்­பார்த்த தீர்­வுகள் வழங்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கின்­றதே ? 

பதில் : அவ்­வாறு முழு­மை­யாகக் கூறி­விட முடி­யாது. காரணம் எம்மால் இயன்­ற­ளவு வடக்­கிலும் கிழக்­கிலும் பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்ளோம். அபி­வி­ருத்­திக்­காக அவர்கள் எதிர்­பா­ரா­த­ளவு நிதியை நாம் ஒதுக்­கினோம். எனினும் அவர்­களால் செய்து கொள்ள முடி­யாமல் போன விட­யங்­க­ளுக்கு ஐக்­கிய தேசிய கட்சி மீது குறை கூறு­வதில் அர்த்­த­மில்லை. 

அர­சாங்கம் என்ற ரீதியில் போதி­ய­ளவு நிதி ஒதுக்­கப்­பட்­டது. எனினும் குறித்த பகு­தி­க­ளுக்­கான அர­சியல் தலை­வர்கள் அவர்­களே. எனவே அவர்கள் தான் ஒதுக்­கப்­பட்ட நிதியைக் கொண்டு அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். 

கேள்வி : நீங்கள் குறிப்­பிடும் அபி­வி­ருத்­திகள் ஒரு­புறம் மாத்­தி­ரமே. அவர்கள் கூறு­வது அர­சியல் தீர்வு, காணாமல் போனோர் விடயம் உள்­ளிட்­ட­வை­யாகும். 

பதில் : எமது அர­சாங்­கத்­தி­லேயே காணாமல் போனோர் பற்­றிய அலு­வ­லகம் நிறு­வப்­பட்­டது. பாரா­ளு­மன்­றத்தில் அர­சி­ய­ல­மைப்பு பேரவை ஊடாக காணாமல் போன ஆட்கள் பற்­றிய சட்­டத்தின் கீழ் இதனை நிறு­வினோம். காணாமல் போனோர் பற்­றிய அலு­வ­லகம் நிறு­வப்­பட்ட போது அன்றைய தினம் எமக்கு பாரா­ளு­மன்­றத்தில் முழு­மை­யான ஆத­ரவு வழங்­கப்­ப­ட­வில்லை. 

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி சார்பில் இதற்கு முழு­மை­யான ஆத­ர­வ­ளிக்க முன்­வ­ர­லில்லை. கொள்கை ரீதி­யாக ஒத்­து­ழைப்பு வழங்­கு­வதைப் போன்று காண்­பித்­தாலும் நடை­மு­றைப்­ப­டுத்தும் போது முழு­மை­யான ஒத்­து­ழைப்பு கிடைக்கப் பெற­வில்லை என்­பதே உண்­மை­யாகும். 

கேள்வி : பொதுத் தேர்­தலில் கொழும்பில் தமிழ் வேட்­பா­ளர்­க­ளுக்­கான ஒதுக்­கீடு எவ்­வாறு? 

பதில் : ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் கொழும்பில் தமிழ் மக்­க­ளுடன் இணைந்து செயற்­படும் வேட்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­டுவர். 

கேள்வி : சஜித் பிரே­ம­தாச பிர­த­ம­ராக தெரிவு செய்­யப்­பட்டால் ஜனா­தி­பதி கோத்த­பாய ராஜ­ப­க் ஷ­வுடன் இணைந்து பய­ணிக்க தயா­ராக இருப்­ப­தாக ஐ.தே.க. உறுப்­பி­னர்கள் சிலர் கூறு­கின்­றனர். நீங்­களும் அதே நிலைப்­பாட்டில் இருக்­கின்­றீர்­களா ? 

பதில் : ஒன்­றி­ணைந்து பய­ணிக்க தயார் என்றால் முன்னர் காணப்­பட்­டதைப் போன்று தேசிய அர­சாங்கம் ஒன்று அமைக்­கப்­பட வேண்டும். ஆனால் அவர்கள் ஜனா­தி­பதி கோத்த­பாய ராஜ­பக் ஷ, - பிர­தமர் சஜித் பிரே­மதாச என்று கூறு­வதன் மூலம் சஜித்தை நெருக்­க­டிக்குள் தள்ள முற்­ப­டு­கின்­றனர். அவரை பிறி­தொரு கட்­சியின் உறுப்­பி­ன­ராக்­கு­வதைப் போன்று கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றனர். அவ்­வாறு செயற்­ப­டு­வ­தாக இருந்தால் ஐக்­கிய தேசிய கட்­சியுடன் கலந்­தா­லோ­சித்து அதனைச் செய்ய வேண்டும். 

கொள்கை ரீதி­யாக வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒன்­றி­ணைய வேண்டும். கொள்கை என்­பது அர­சாங்­கத்­துடன் இணைந்து அதனைப் பாது­காப்­பது அல்ல. காணப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­வேண்டும். நாட்டில் தேசிய பிரச்­சி­னைக்கு எவ்­வாறு தீர்வு காண்­பது என்­பது பற்றி சிந்­திக்க வேண்டும். கடந்த காலத்­தி­லி­ருந்து இதற்­கான தீர்­வினை வழங்க அவர்கள் மறுப்பு தெரி­விக்கும் நிலையில் நாமும் அவர்­க­ளுடன் இணைந்தால் இறுதி வரையில் தீர்வு காண முடி­யாமல் போகும். 

இவர்கள் இவ்­வாறு கூறு­கி­றார்கள் என்­ப­தற்­காக பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ ஐக்­கிய தேசிய கட்­சியில் இணை­வாரா? இல்­லையே. எனவே தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான கூட்­ட­ணியை அமைப்­பது தொடர்­பி­லேயே நாம் தற்­போது கவனம் செலுத்த வேண்டும். 

கேள்வி : சஜித் பிர­த­ம­ரானால் உங்­களின் அடுத்த கட்ட நட­வ­டிக்கை என்ன? 

பதில் : ஐக்­கிய தேசிய கட்சி எவ்­வா­றான தீர்­மா­னங்­களை எடுத்­தாலும் அதற்­கேற்ப செயற்­ப­டு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றேன். 

கேள்வி : கடந்த தேர்­தலில் ஜனா­தி­பதி கோத்த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு சிறு­பான்மை மக்கள் பெரு­ம­ள­வி­லான வாக்­கு­களை வழங்­கி­யி­ருக்­க­வில்லை. இந்­நி­லையில் தேசிய கீதம் விவ­காரம், அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை அதி­க­ரிப்பு என்­ப­வற்றால் பொதுத் தேர்­தலில் மேலும் அவர்­க­ளுக்கு சிறு­பான்மை மக்­க­ளின் வாக்கு வீதம் குறை­வ­டையும் நிலை­மையே காணப்­ப­டு­வ­தாக பர­வ­லாகப் பேசப்­ப­டு­கி­றது. இது ஐக்­கிய தேசிய கட்­சிக்கு சிறந்த வாய்ப்­பாகும். இதனை எவ்­வாறு பொதுத் தேர்­தலில் பயன்­ப­டுத்திக் கொள்ளப் போகின்­றீர்கள் ? 

பதில் : இவ்­வா­றான விட­யங்கள் தொடர்பில் கவனம் செலுத்­து­வதே தற்­போது அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும். இலங்கை பல இனத்­த­வர்­களை உள்­ள­டக்­கிய நாடு என்­பதை அனை­வரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே ஒரு இனத்­தவர் மாத்­தி­ரமே இருக்­கின்­றனர் என்று எண்ணி செயற்­படக் கூடாது. அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்து புரிந்­து­ணர்­வுடன் முன்­னெ­டுக்க வேண்­டிய வேலைத்­திட்­டங்கள் தொடர்­பி­லேயே நாம் கவனம் செலுத்த வேண்டும். இதற்­கான சிறந்த வாய்ப்­பாக நாம் இதனைக் கரு­து­கின்றோம். அதற்­கேற்ப இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்திக் கொள்வோம். 

கேள்வி : ஜனா­தி­பதித் தேர்­தலில் பெரு­ம­ள­வான பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்கள் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கே வாக்­க­ளித்­தி­ருந்­தனர். அவர்­க­ளுக்கு பொதுத் தேர்­தலில் ஐ.தே.க. வழங்கும் வாக்­கு­றுதி என்ன ? 

பதில் : கடந்த 2015 ஆம் ஆண்டு எமக்கு அதி­காரம் கிடைக்கப் பெற்­ற­வுடன் நாம் அவர்­க­ளுக்கு பல்­வேறு அபி­வி­ருத்தி திட்­டங்­களை செயற்­ப­டுத்­தினோம். தனி வீடுகள் அமைத்துக் கொடுத்­துள்ளோம், சம்­பளம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது, வாழ்க்கை செலவு சீர்­ப­டுத்­தப்­பட்­டது, பாட­சா­லைகள், வைத்­தி­ய­சா­லைகள் அமைத்துக் கொடுக்­கப்­பட்­டன. 

பெருத்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளா­னாலும், தமிழ் மக்­க­ளா­னாலும், முஸ்லிம் மக்­க­ளா­னாலும் ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் அனை­வரும் ஒன்று. எனவே நாம் வேறு­பா­டின்றி அனைத்து மக்­க­ளுக்கும் சேவை செய்­வ­தற்கே எதிர்­பார்த்­துள்ளோம். ஆனால் சில கட்­சிகள் இவர்­களை வேறு­ப­டுத்தி பார்க்­கின்­றன. 

கேள்வி : அர­சாங்கம் பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு 1000 ரூபாய் அடிப்­படை சம்­ப­ள­மாக வழங்­கு­வ­தாகக் கூறி தற்­போது நாளாந்த சம்­ப­ள­மா­கவே 1000 ரூபாவை வழங்­கி­யி­ருக்­கி­றது. இது தொடர்பில் உங்கள் நிலைப்­பாடு? 

பதில் : அடிப்­படை சம்­ப­ள­மாக 1000 ரூபா வழங்­கு­வ­தாகக் கூறினால் அது சாத்­தி­ய­மான விட­யமா என்று சிந்­திக்க வேண்டும். தற்­போது வழங்­கு­வ­தாகக் கூறி­யுள்ள நாட் சம்­பளம் 1000 ரூபாய் வழங்­கப்­பட்­டாலும் வேலை நாட்கள் குறைக்­கப்­பட்டால் அந்த மக்­க­ளுக்கு போதி­ய­ளவு வரு­மானம் கிடைக்­காது என்­பதே உண்­மை­யாகும். எவ்­வா­றி­ருப்­பினும் அவர்கள் கூறி­யதை செயற்­ப­டுத்த வேண்டும். அத்­தோடு பெருந்­தோட்ட கம்­ப­னிகள் இதனை புறக்­க­ணித்­துள்­ளன என்­பது சுட்­டிக்­காட்ட வேண்­டிய விட­ய­மாகும். 

கேள்வி : சம்­பள அதி­க­ரிப்­புக்கு கம்­ப­னிகள் இணக்கம் தெரி­விக்­கா­விட்டால் அனைத்து பெருந்­தோட்­டங்­க­ளையும் அர­சாங்கம் பொறுப்­பேற்க தயார் என்றும் சில அமைச்­சர்கள் கூறு­கின்­றனர். இது நடை­மு­றைச்­சாத்­தி­ய­மா­னதா ? 

பதில் : இது போன்று தான் இந்த அர­சாங்கம் வெறும் கதை­களைக் கூறிக் கொண்­டி­ருக்­கி­றது. அரிசி விலையைக் குறைப்­ப­தாகக் கூறி­னார்கள். அத­னையும் செய்­ய­வில்லை. ஏற்­க­னவே காணப்­பட்ட விலையும் தற்­போது அதி­க­ரித்­துள்­ளது. பொது மக்­க­ளுக்கு அறி­விக்­காமல் மின்­சாரம் துண்­டிக்­கப்­ப­டு­கி­றது. எனவே இந்த அர­சாங்கம் சொல்­வதைச் செய்­வ­தாகத் தெரி­ய­வில்லை. ஆனால் நாம் ஆட்­சிக்கு வந்தபோது சொல்­லி­யதைச் செய்தோம். 

வாழ்க்கை செலவை குறைக்க எமக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை தேவைப்­ப­ட­வில்லை. கூறிய அனைத்து விட­யங்­க­ளையும் 100 நாட்­களில் செய்தோம். 

கேள்வி : 19 ஆம் அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்­வதை விட அதனை முற்­றாக நீக்கி புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வாக்கும் முயற்­சி­களை புதிய அர­சாங்கம் முன்­னெ­டு­க்கப் போவ­தாகக் கூறு­கின்­றதே? 

பதில் : 19ஆம் அர­சி­ய­ல­மைப்பை நீக்­கு­வ­தற்கு இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்­பதில் நாம் உறு­தி­யாக இருக்­கின்றோம். அதில் மாற்று கருத்­துக்கு இட­மில்லை. 

கேள்வி : பொதுத் தேர்­தலில் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெற்றுக் கொள்ள முடி­யுமா? 

பதில் : மூன்றில் இரண்டு பெரும்­பான்மை என்­பதை விட பாரா­ளு­மன்­றத்தில் முழு ஆச­னத்­தையும் தாமே பெற்றுக் கொள்வோம் என்ற நிலைப்­பாட்­டி­லேயே அவர்கள் இருக்­கின்­றார்கள். ஆனால் அவர்­க­ளுக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை அல்ல, 113 ஆச­னங்­களை பெற்றுக் கொள்­வது கூட சவா­லா­கவே உள்­ளது. 

கேள்வி : ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பி­னர்கள் சிலர் அர­சாங்­கத்­துடன் இணை­ய­வி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கின்­றதே?

பதில் : ஐக்­கிய தேசிய கட்­சி­யி­லி­ருந்து மாத்­தி­ரமல்ல. இரு­த­ரப்­பிலும் கட்சி தாவல்­களை பொதுத் தேர்­த­லுக்கு பின்­னரே அவ­தா­னிக்க முடியும். எவ்­வா­றி­ருப்­பினும் நாடு பிள­வு­ப­டு­வதைத் தடுக்க வேண்டும் என்றால் இரு பிர­தான கட்­சிகள் ஒன்­றி­ணைந்து தேசிய கொள்கையொன்றின் கீழ் செயற்பட வேண்டும். 

கேள்வி : தற்போது நாடு முழுவதும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியொருவர் தான் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளை நாட்டு மக்கள் இராணுவ மயமாக்கலாக கருதக் கூடுமல்லவா? 

பதில் : கோத்தபாய ராஜபக் ஷ ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும் என்று தேர்தலுக்கு முன்னரே நாம் கூறினோம். ஆனால் பெரும்பாலான மக்கள் கண்களை மூடிக் கொண்டு வாக்களித்துள்ளனர். 

கேள்வி : தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார முன்னெடுப்புக்கள் குறித்து ? 

பதில் : நாம் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி அவர்களின் வாழ்க்கை செலவை குறைத்தோம். ஆனால் இவர்கள் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டு கடந்த அரசாங்கத்தை குறைகூறி நாட்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

கேள்வி : எரிபொருள் விலை சூத்திரம் நீக்கப்பட்டுள்ளமை பற்றி உங்கள் கருத்து ? 

பதில் : எரிபொருள் விலை சூத்திரம் பாரியளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் கருதவில்லை. எனினும் எரிபொருளினால் நஷ்டம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 

தற்போது மின்சார சபை 115 பில்லியன் கடனில் செல்லுகின்றது. அதே போன்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் 200 பில்லியன் கடனிலும், ஸ்ரீலங்கன் எயா ர்லைன்ஸ் 215 பில்லியன் கடனிலும் செயற்படுகின்றது. இவை சிறு தொகை அல்ல. எனவே இவற்றைப் பற்றி பேசிக் கொண்டிருக்காது நடைமுறை பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48