கொரோனா வைரஸ் குறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

10 Feb, 2020 | 04:19 PM
image

உலகையே அச்சுறுத்தியுள்ள நாவல் கொரோனா வைரஸ் நிமோனியா தொடர்பில் ஒரு சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளுக்கமைய வுஹான், ஹூபே மாகாணம் மற்றும் நாடு முழுவதும் நாவல் கொரோனா வைரஸ் நிமோனியா காரணமாக பாதிக்கப்பட நோயாளர்களில் குணமடைந்தவர்களின் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்றைய தரவு பகுப்பாய்வின்படி, நாடு முழுவதும் உள்ள நாவல் கொரோனா வைரஸ் நிமோனியா நோயாளர்களில் குணமடைந்தவர்களின் விகிதம் 8.2 சதவீதமாக உள்ளதாகவும் இதுவே ஜனவரி 27 அன்று 1.3 சதவீதமாக இருந்துள்ளதாகவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஹூபே மாகாணத்தில் குணமடைந்தவர்களின் விகிதம் ஜனவரி 27 அன்று 1.7 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதத்தை எட்டியுள்ளது.

மேலும்  கொரோனா வைரஸ்  தாக்கத்தின் மையப்பகுதியான வுஹானில் குணமடைந்தவர்களின் விகிதம் ஜனவரி 27 அன்று 2.6 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாக உயர்ந்தது.

புதிய வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டதன் காரணமாக, சிகிச்சைகள் வலுப்பெற்றதுடன், நோயாளிகளுக்கு ஹூபே மற்றும் வுஹானில் சிகிச்சை அளிக்கும் விகிதம்  கணிசமாக மேம்பட்டுள்ளது.

இதன் காரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார ரீதியாகவும்  பொருளாதார ரீதியாகவும் மிக மோசமான நிலையை எதிர்நோக்கியுள்ள சீனாவின் நிலை வழமைக்குத் திரும்புமாயின், உலக நாடுகள் எதிர் கொண்ட சுகாதார அவரநிலையும் மாற்றமடையும் அவ்வாறான ஒருசூழலை உருவாக்க சீனா மிக கடுமையாக உழைக்கின்றது. 

இதேவேளை வேல்ட்மீற்றர் தரவுபடி (10/02) காலை 10.10 மணிவரை  பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை  40,632 ,  இறப்பு எண்ணிக்கை 910, குணமடைந்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 3,466 ஆகவும்  பதிவாகியுள்ளமை குறிபிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47