"சீன கொரோனா வைரஸ் தொற்றுக்கு அமெரிக்காவின் சதித்திட்டம் காரணம்": ரஷ்ய ஊடகத்தின் ஊகத்தால் சர்ச்சை

Published By: J.G.Stephan

10 Feb, 2020 | 12:50 PM
image

சீனாவில் பரவி வரும் கொரோனா வைர­ஸுக்கு சதி­வே­லைகள் காரணம் என தவ­றான தக­வல்கள் இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பரப்­பப்­பட்டு வரு­வ­தாக எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளமை ஏற்­க­னவே அனை­வரும் அறிந்­த­தாகும். 


இந்­நி­லையில் ரஷ்­யாவில் தொலைக்­காட்சி செய்தி  ஒளிப­ரப்­புகள் அமெ­ரிக்கா உள்­ள­டங்­க­லான மேற்­கு­லக  நாடு­களின் சதித்­திட்­டமே கொரோனா வைரஸ் என பகி­ரங்­க­மாக செய்தி வெளியிட்டு சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

 அந்­நாட்டு சனல் வண் தொலைக்­காட்­சியின் வரெ­மியா (நேரம்) என்ற  பிர­தான மாலைச் செய்தி நிகழ்ச்­சியில் லத்தீன் மற்றும் ரஷ்ய மொழி­களில் கிரீடம் என்று பொருள்­படும் கொரோனா என்ற பெய­ரா­னது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் எந்த வழி­யிலோ அத­னுடன் சம்­பந்­தப்­பட்­டுள்­ளதை சுட்­டிக்­காட்­டு­வ­தாக உள்­ளது  எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. டொனால்ட் ட்ரம்ப் அழகுப் போட்­டி­க­ளுக்கு தலைமை தாங்­கு­வதும்  வெற்­றி­யா­ளர்­க­ளுக்கு கிரீ­டங்­களை கைய­ளிப்­பதும் வழ­மை­யா­க­வுள்­ளதால் கிரீடம் என்ற சொல்­லுக்கும் டொனால்ட் ட்ரம்­பிற்கும் தொடர்பு உள்­ள­தாக அந்த ஊட­கத்தைச் சேர்ந்த ஊட­க­வி­ய­லாளர் ஊகம் வெளியிட்­டுள்ளார்.

நிஜத்தில் கிரீ­டத்தின் வடிவைக் கொண்­டி­ருந்­த­தா­லேயே கொரோனா வைர­ஸுக்கு  அந்தப் பெயர் விஞ்­ஞா­னி­களால் சூட்­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 

இத­னை­ய­டுத்து அந்த ஊட­கத்தில்  வெ ளியி­டப்­பட்ட  காணொளிக் காட்­சியில் கிரீடம் தொடர்­பான ஊகம் விநோ­த­மான ஒரு முன்­வைப்பு என்­பது ஒப்­புக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.  ஆனால் ஆசி­யர்­களை மட்டும் பாதித்­துள்ள இந்தப் புதிய வைரஸ் இன­ரீ­தி­யான உயி­ரியல் ஆயு­த­மொன்­றாக இருக்கக்கூடும் என்ற ஊகம் அந்த ஊட­கத்தால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. சீன கொரோனா வைரஸ் செயற்­கை­யாக உரு­வாக்­கப்­பட்­டதென நிபுணர் ஒருவர் தெரி­வித்­துள்­ள­தா­கவும்  அதற்குப் பின்­ன­ணியில் அமெ­ரிக்க புல­னாய்வு முகவர் நிலை­யங்கள் அல்­லது அமெ­ரிக்க மருந்துக் கம்­ப­னிகள் இருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­வ­தா­கவும் அந்த ஊடகம் தெரி­விக்­கி­றது.

அதே­ச­மயம் மருந்­தக கம்­ப­னிகள், அமெ­ரிக்கா அல்­லது அதன் முக­வர்கள்  உள்­ள­டங்­க­லான பல்­வே­று­பட்ட மேற்­கு­லக சக்­திகள் சீனப் பொருளாதாரத்தை பலவீ னப்படுத்தும் இலக்கில்  இந்த வைரஸை எந்த வகையிலாவது உருவாக்கி பரப்பி யிருக்கலாம் என சனல் வண் தொலைக் காட்சியின் பிறிதொரு அரசியல் நிகழ்ச்சியான  வரெமியா பொகாஸெட்டில்  ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10