ஒஸ்கர் விருதுகள் விபரம் : சிறந்த சர்வதேச திரைப்படமாக வேற்றுமொழித் திரைப்படம் தெரிவு!

10 Feb, 2020 | 03:04 PM
image

92 ஆவது ஒஸ்கர் விருதுகள் விழா லொஸ்ஏஞ்ல்சில் கோலாகளமாக அரங்கேரியது. சீரற்ற வானிலைக் காரணமாக சில சிக்கல்கள் ஏற்பட்டிருந்தபோதிலும், எப்போதும் போலவே, 92 ஆவது ஒஸ்கர் விருதுகள் விழா மிகவும் விருவிருப்பாக நடை பெற்றுள்ளது. 

92 ஆவது ஒஸ்கர் விழாவில்  இம்முறை சிறந்த வேற்றுமொழித் திரைப்படம் என்ற விருதுப் பிரிவு, சிறந்த சர்வதேச திரைப்படம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் தென்கொரியத் திரைப்படமான 'பாரசைட்' (Parasite)  திரைப்படமே இவ்விருதை வென்றுள்ளது.

அத்துடன் இத்திரைப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த அசல் திரைக்கதை மற்றும் சிறந்த சர்வதேச திரைப்படம் ஆகிய  நான்கு  விருதுகளை பெற்று முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக அயல்நாட்டு திரைப்படம் பல விருதுகளை குவித்திருப்பது ஒஸ்கர் விருதுகள் விழாவில் வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. 

இதே போன்று முதலாம் உலகயுத்தத்தை மையப்பபடுத்தி எடுக்கப்பட்ட “1917“ திரைப்படம்  சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என மூன்று ஒஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.

“ஜோக்கர்“ (Joker) திரைப்படத்திற்கு அதிக விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், சாம் மெண்டெஸ் இயக்கத்தில் வெளியான  “1917“  திரைப்படமும், பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் வெளியான 'பாரசைட்' திரைப்படமும் அதனை பின்தள்ளியுள்ளன.

ஆனால் 2019 இல் அதிகம் பேசப்பட்ட “ஜோக்கர்“ திரைப்படத்தின் கதாநாயகனான (Joaquin Phoenix - Joker) ஆக்கின் ஃபீனிக்ஸ்க்கு சிறந்த நடிக்கருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த படத்திற்காக பல சர்வதேச விருதுகளை ஆக்கின் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் “ஜோக்கர்“ திரைப்படம் சிறந்த பின்னணி இசைக்கான விருதினையும் பெற்றுள்ளது.  இவ்விருதினை ஐஸ்லாந்தை சேர்ந்த ஹில்டர் குட்னடாட்டிர் பெற்றார்.

இதேவேளை சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதினை பாரசைட்' படத்திற்காக (Parasite - Bong Joon-ho) பாங் ஜூன் ஹோ பெற்றார்.

 சிறந்த நடிகைக்கான விருது ரினே ஸெல்வேகர்க்கு “ஜூடி” (Renee Zellweger - Judy) படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. 

சிறந்த துணை நடிகருக்கான விருது பிராட் பிட்க்கு ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ (Brad Pitt - Once Upon A Time in Hollywood) படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. 

சிறந்த துணை நடிகைக்கான விருது லாரா டெர்ன்க்கு  'மேரேஜ் ஸ்டோரி'   (Laura Dern - Marriage Story) படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. 

ஏனைய விருதுகள் 

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் -  'லிட்டில் வுமன்'  - ஜாக்குலின் (Little Women - Jacqueline Durran)

சிறந்த பாடல் -  'ராக்கெட்மேன்' - எல்டன் ஜான், பெர்னீ டாபின் (I'm Gonna) Love Me Again - Rocketman (Elton John & Bernie Taupin)

சிறந்த பின்னணி இசை -  'ஜோக்கர்' -  ஐஸ்லாந்தை சேர்ந்த ஹில்டர் குட்னடாட்டிர் 

சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம் -  'பாம்ஷெல்' (Kazu Hiro, Anne Morgan & Vivian Baker)

சிறந்த காட்சி அமைப்பு  -  '1917' (1917 - Guillaume Rocheron, Greg Butler & Dominic Tuohy)

சிறந்த படத்தொகுப்பு -  ‘ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி’ -  மைக்கெல் மஸ்கர், ஆண்ட்ரூ பக்லேண்ட் (Ford v Ferrari - Michael McCusker & Andrew Buckland)

சிறந்த ஒளிப்பதிவு -  ‘1917’ - ராஜர் டீகின்ஸ்  (கடந்த வருடம்  ‘பிளேட் ரன்னர் 2049’ படத்திற்காக ரோஜர் டீக்கின்ஸ் ஆஸ்கார் விருதினை பெற்றிருந்தார்) (1917 - Roger Deakins)

சிறந்த ஒலிக் கலவை -  '1917'  - மார்க் டெய்லர், ஸ்டூவர்ட் வில்சன் (1917 - Mark Taylor & Stuart Wilson) 

சிறந்த ஒலித்தொகுப்பு - 'ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி'  - டொனால்ட் சில்வெஸ்டர் (Ford v Ferrari - Donald Sylvester)

சிறந்த ஆவணக் குறும்படம் - ‘லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் எ வார்ஸோன்’ (Learning to Skateboard in a Warzone (If You're a Girl))

சிறந்த ஆவணப் படம்  - 'அமெரிக்கன் ஃபேக்டரி' (American Factory)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’  (Once Upon A Time in Hollywood - Barbara Ling & Nancy Haigh)

சிறந்த குறும்படம் - 'தி நெய்பர்ஸ் விண்டோ' (The Neighbors' Window)

சிறந்த தழுவல் திரைக்கதை -  'ஜோஜோ ராபிட்' - எழுத்தாளர் டைகா வைடிடி (Jojo Rabbit - Taika Waititi)

சிறந்த அசல் திரைக்கதை - 'பாரசைட்' - பாங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வொன்  (Bong Joon Ho & Jin Won Han)

சிறந்த அனிமேஷன் குறும்படம் -  'ஹேர் லவ்' (Hair Love)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் -  'டாய் ஸ்டோரி 4 ' (Toy Story 4)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37