15,000 ற்கும் அதிகமான பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை

Published By: Digital Desk 4

10 Feb, 2020 | 11:59 AM
image

அரசின் வரி நிவாரண நன்மையை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன், சுமார் 15,000 ற்கும் அதிகமான பொருட்களுக்கான விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

Image result for பொருட்களின், விலைகள்

இந்த விலைக் குறைப்பு சம்பந்தமாக, பொருட்களைத் தயாரிக்கும் அதேபோல் இறக்குமதி செய்யும் நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்கள் அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளன.    இதற்கமைய, குறித்த பொருட்களின் பெயர்கள் மற்றும் விலைகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை, விசேட பகுப்பாய்வு நடவடிக்கைகளை  முன்னெடுத்துள்ளது. 

ஆகவே, குறித்த பொருட்களின் பெயர்கள் மற்றும் விலைகள் தொடர்பில் வெகு விரைவில் நுகர்வோருக்கு பத்திரிகையூடாக தெரியப்படுத்துமாறும், நுகர்வோர் விவகார அதிகார சபை சம்பந்தப்பட்ட நிறுவனங்களைக் கேட்டுள்ளது. 

கட்டுமானப் பொருட்கள், உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் அரசின் வரி நிவாரணக் கொள்கைகளுக்கமைய குறைக்கப்படவுள்ளன. 

இதற்கு முன்னர், பால்மா மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான விலைக் குறைப்பை மேற்கொள்ள, நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்திருந்தது. 

அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வெட் வரியை எட்டு  வீதமாகக்  குறைத்தமை, தேசிய நிர்மாண வரியை நீக்கியமை ஆகியவற்றின் ஊடாகக் கிடைத்த நன்மைகள், நுகர்வேரைச் சென்றடைந்துள்ளனவா என்பதை  ஆராயவும், நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

   அதனை முன்னெடுக்க, நுகர்வோர் விவகார அதிகார சபையில் விசேட விசாரணைப் பிரிவு ஒன்றை ஸ்தாபிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45