பாடசாலை சிறுவனொருவன் புகையிரத தண்டவாளத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் போது  புகையிரதத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் புகையிரத தண்டவாளத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் போது வேகமாக வந்த புகையிரதத்தை கவனிக்காது இருந்தமையால் குறித்த புகையிரதத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இதேவேளை, குறித்த விபத்தை செல்பி எடுத்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் தனது தொலைபேசியில் பதிவு செய்துள்ளார். 

குறித்த காணொளிப் பதிவானது தற்போது இணையத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.