சின்னம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பவர்கள் இறுதியில் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் :கெஹலிய  

Published By: R. Kalaichelvan

08 Feb, 2020 | 03:08 PM
image

பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன  பெரமுனவினர்  மொட்டு சின்னத்தில் மாத்திரமே போட்டியிடுவார்கள். இன்று சின்னம் குறித்து  மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பவ்ர்கள் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக இறுதியில் மொட்டு சின்னத்திலேயே   அவர்களும் போட்டியிடுவார்கள் என முதலீட்டு ஊக்குவிப்பு   இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கண்டியில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தோற்றம் பெற்றபோது  மொட்டு சின்னத்தில் மாத்திரமே எத்தேர்தலையும் எதிர்க் கொள்வோம் என்று  உறுதியாக குறிப்பிட்டோம். 

2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம் பெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் எக்கட்சிகளுடன் கூட்டணியமைக்காமல் தனித்து  மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு 55 இலட்ச வாக்குகளுக்கும்  அதிகமான வாக்குகளை நாடுதழுவிய ரீதியில் பெற்று முதல்  வெற்றியை தக்கவைத்தோம்.

இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவினர் மொட்டு  சின்னத்தில் மாத்திரமே போட்டியிடுவோம் என்று கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டு வந்தோம்.

 மக்களின் நல்லபிப்பராயத்தினையும் மொட்டு சின்னம் மாத்திரமே பெற்றுள்ளது. நீங்கள்  எந்த கட்சி என்று  பொது மக்களிடம் கேட்கும் போது அவர்கள் தாங்கள் பொஹோட்டுவ (மொட்டு) சின்னம் என்று அடையாளப்படுத்துகின்றார்கள்.

 கட்சியின்  தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்  பெயர் கூட  குறிப்பிடப்படுவது கிடையாது .அந்தளவிற்கு மொட்டு சின்னம் மக்கள் மத்தியில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சின்னத்தை மாற்றுவது குறித்து பல தரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட  கருத்துக்கள்  எதுவும் வெற்றிப் பெறவில்லை.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு அமோக  வெற்றிப் பெற்றார்.   சின்னம் குறித்து  எமக்குள் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது.  சின்னத்தை மாற்றுவதற்கான தேவையும்  கிடையாது.

பொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவினர் மொட்டு சின்னத்திலேயே  போட்டியிடுவோம் இன்று சின்னம் குறித்து  மாற்றுக்கருத்தினை தெரிவிப்பவர்கள் தேர்தலில்  வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக இறுதியில் மொட்டு சின்னத்திலேயே  போட்டியிடுவார்கள்.

ஆகவே சின்னம் தொடர்பான மாறுப்பட்ட கருத்துக்களுக் கு   கவனம் செலுத்த வேண்டியதில்லை  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02