கண்டி, நுவரெலியாக்கு முழு வசதிகளையும் கொண்ட இரு தமிழ்ப் பாடசாலைகள் உதயமாகவேண்டும்" - வேலுகுமார் 

Published By: Digital Desk 4

08 Feb, 2020 | 02:13 PM
image

“கண்டி மாவட்டத்துக்கு முழுமையான வசதிகளைக்கொண்ட தமிழ்ப் பாடசாலையொன்றின் தேவை நீண்டகாலமாக இருந்துவருகின்றது. இதற்கு எமது ஆட்சியில் அடித்தளமிடப்பட்டது. எனவே, இந்த ஆட்சியில் அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”

என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் கோரிக்கை விடுத்தார்.

கண்டி திகன , மாபெரிதென்ன, நித்துலேமட, செனரத்வௌ ஆகிய கிராமங்களை உள்ளடக்கி  மூன்றாவது முறையாகவும் போகஸ் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா இன்று (08.02.2020) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” இக்கிராமங்களில் பல இனங்களை, பல மதங்களை, பல கலாச்சாரங்களை சேர்ந்தர்வர்கள் வாழ்கின்றனர். எனவே, இப்படியான நிகழ்வுகள் இம்மக்களுக்கு இடையிலான புரிந்துணர்வுக்கும், சக வாழ்வுக்கும் அடிப்படையாக அமைகின்றன. அத்துடன், சமூகங்களுக்கிடையில் தமது கலாச்சாரங்களை, பண்பாடுகளை பரிமாற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துகின்றது.

குறிப்பாக கண்டி  மாவட்டத்திற்கான முழு வசதிகளை கொண்ட தமிழ் பாடசாலை ஒன்றின் தேவை நீண்டகாலமாக இருந்து வருகின்றது. எமது அரசாங்கத்தில் நுவரெலியா மாவட்டத்திலும், கண்டி மாவட்டத்திலும் அத்தகைய இரு பாடசாலைகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்கமைய பாடசாலை அமைப்பதற்காக, கண்டி,  மாபெரிதென்ன பண்ணையில் இருந்து  ஐந்து ஏக்கர் நிலத்தை பெறுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியது.

அவ்வாறு உருவாகும் பாடசாலை தங்கும் இட வசதிகளுடன் கூடியதாக காணப்படும். நாங்கள் அதற்கான ஆரம்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம். இன்றைய அரசாங்கத்தின் சவால்களை எதிர்கொண்டு இப் பாடசாலை உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.” என்றும் வேலுகுமார் எம்.பி. தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:17:53
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54