சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்ணியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Digital Desk 3

08 Feb, 2020 | 10:30 AM
image

சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதி மக்களினால் கிண்ணியா பிரதேச சபைக்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று  (07.02.2020) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கிண்ணியா பிரதேசத்தை உள்ளடக்கிய மகமாரூ பிரதான வீதியின் ஊடாக கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்யுமாறும், போராட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அமைவாக விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும், இதற்கென போராட்டக்காரர்கள் சார்ப்பில் 10 பேர் கொண்ட குழு ஒன்றை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு வருகை தருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டதுடன் பிரதேச செயலாளரே,பிரதேச சபை தவிசாளரே கவனமெடுக்கவும் ,உயிரை இழக்கு வைக்காதே ,கனரக வாகனத்தை தடை செய் என பல சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பினை முன்னெடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்டவர் விஜயம் செய்து சாதகமான பதில் ஒன்றை முன்வைத்தமையால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47