எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் ; சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் 20 ஆம் திகதி!

Published By: R. Kalaichelvan

07 Feb, 2020 | 08:14 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸுக்கான எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த விவாதம் அன்றையதினம்  பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை இடம்பெறவிருப்பதுடன்  ஐக்கிய தேசியக் கட்சி இவ்விவாதத்தை முன்வைக்கவுள்ளது.

அதேநேரம் கடந்த அரசாங்க காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்றை எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கவிருப்பதாக ஆளும் கட்சி இங்கு தெரிவித்தது.

இந்த குறைநிரப்பு பிரேரணை தொடர்பில் 20ஆம் திகதி முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரையும் விவாதம் முன்னெடுக்கப்படும்.

ஏதாவது ஒரு காரணத்தினால் குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்படாவிட்டால் எதிர்வரும் 20ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தொடர்பில் முழுநேர சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38