மைத்திரியை விடவும் கோத்தாபயவுடன் இணைந்து செயற்பட சுலபமாக இருக்கும் : தயா கமகே

Published By: R. Kalaichelvan

07 Feb, 2020 | 07:29 PM
image

(செ.தேன்மொழி)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் 113 ஆசனங்களை பெற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் செயற்பட்டதை விட கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுவது சுலபமாக இருக்கும் என்றும் கூறினார்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் சிறந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் , பொது தேர்தலில் 113 ஆசனங்களை பெற்று வெற்றியீட்டி கோத்தாபயவுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம்.

தேர்தல் காலங்களில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அதனால் மக்கள் எம்மை நிராகரித்துள்ளனர். ஆனால் எமது அரசாங்கத்தில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இவற்றை தொடர்ந்தும் விமர்சிக்காமல் அதிலிருக்கும் நலன்களை கருத்திற் கொண்டு அரசாங்கம் அதனை செயற்படுத்த வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தை எவ்வளவுதான் விமர்சித்தாலும், நாங்கள் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் மக்களுக்கு பல்வேறுப்பட்ட சலுகைகளை பெற்றுக் கொடுத்தோம்.

இதன்போது பாராளுமன்றத்தில் 47 ஆசனங்களை நாங்கள் கொண்டிருந்தோம்.

அரசாங்க தரப்பினர் தேர்தல் பிரசாரங்களின் போது மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். ஆனால் அவற்றை தற்போது நிறைவேற்றாதிருக்கின்றனர். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தாலும். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04