கோத்தாவுடன் இணைந்து பயணம் செய்ய விரும்பும் ஐ.தே.கவினர்  பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ளலாமே : பொன்சேகா  

Published By: R. Kalaichelvan

07 Feb, 2020 | 05:55 PM
image

 (ஆர்.விதுஷா)

ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி  கோத்தாபயரா ஜபக்ஷவுடன் , சஜித் பிரேமதாசவால் பிரதமராக  இணைந்து பயணிக்க முடியும் என்று கூறுகின்றனர்.

இந்த விடயம் கவலையளிப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தான் ஏற்றுக்கொள்ள  போவதில்லை எனவும் ,அவ்வாறு இணைந்து பயணிக்க  வேண்டுமாயின்  ஐ.தே.கவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை  எனவும் குறிப்பிட்டார்.  

அதேவேளை, இவ்வாறு கூறிக்கொள்பவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பயணிக்கலாமே எனவும் அவர் மேலும் கூறினார். 

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொன்சேகா மேலும்  கூறியதாவது  ,  

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து ஆட்சியமைக்க தயார் என்று  கூறிக்கொள்கின்றனர்.

இது கவலையளிக்கின்றது. ஏனெனில் , ஜனாதிபதிக்கு என  தனிப்பட்ட கொள்கை உண்டு அதன் படி அவர்கள் ஆட்சி  அமைத்துள்ளனர்.

இந்நிலையில் எமக்கென தனித்த கொள்கையுண்டு. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணமுண்டு.ஐ.தேக  . உறுப்பினர்களுக்கென தனிப்பட்ட ரீதியில் கௌரவமுண்டு அதில்  இருந்து விலகி மொட்டு கட்சியினருடன் கைகோர்க்கும்    முயற்சியாகவே இதனை கூற முடியும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. 

இவ்வாறாக அவர்களுடன் இணைந்து பயணிக்க தயாரெனின் அவர்கள் செய்த விடயங்கள் அனைத்தும் சரியென்றாகிவிடுமே.  அந்த வகையில் கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பயணிப்பதென்பது சாத்தியமற்ற விடயமாகும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47