மத்திய குழு தீர்மானத்தின் பிரகாரமே சுதந்திர கட்சியானது தேசிய அரசாங்கத்தில் நிலைகொண்டுள்ளது. எனவே தேசிய பிரச்சினையிலிருந்து விலகிச் செல்லவும் தேசிய பிரச்சினையை விடுத்துச் செயற்படவும் நாம் தயாராக இல்லை அரசாங்கமும் விலகிச் செயற்படாது என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

அதேநேரம் மக்கள் மீது சுமத்தபட்டுள்ள வரிச்சுமை அதிகம் என்பதை அரசாங்கம் மறுக்கவில்லை எனவும் இன்னும் ஒரு வருடத்திற்குள் வரிச்சுமை குறைக்கபடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நீரிபாசன அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.