தம்புள்ளை கண்டலம பிரதேச பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவியின் உடல் முழுவதிலும் பேனாவினால் எழுதச் செய்து  ஆசிரியரொருவர் தண்டனை வழங்கியுள்ளார். 

இது குறித்து தெரியவருவதாவது,

குறித்த மாணவி அதே வகுப்பிலுள்ள இன்னொரு மாணவியின் கையில் பேனாவினால் கிறுக்கியுள்ளார்.

இதற்கு தண்டனையாக ஆசிரியர் வகுப்பறையிலுள்ள 30 மாணவர்களை கொண்டு குறித்த மாணவியின் உடலில் வெவ்வேறு வார்த்தைகளை பேனாவினால் எழுதச் செய்துள்ளார்.

குறித்த தண்டனைக்கு முகங்கொடுத்த பின் மாணவி அப்பாடசாலைக்கு செல்வதை தவிர்த்து வந்தமையால் பெற்றோர் குறித்த மாணவியை தம்புள்ளையிலுள்ள வேறொரு பாடசாலைக்கு மாற்றியுள்ளனர்.

இதேவேளை, குறித்த மாணவிக்கு வழங்கப்பட்ட தண்டனைக் குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்க கூடாதென பல்வேறு வகையில் அவர்களை வற்புறுத்தி வந்ததாக அம்மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர்.

இதன்படி தம்புள்ளைக் கல்வி வலையப்பணிப்பகமானது இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.