த.தே.கூ.வை பலப்படுத்துங்கள் ; உதி­ரி­க­ளுக்கு வாக்­க­ளித்து வர­லாற்றுத் தவறை இழைக்கக் கூடா­து - சி.வி.கே.சிவ­ஞானம்

Published By: Daya

07 Feb, 2020 | 11:08 AM
image

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையே தமிழ் மக்கள் பலப்­ப­டுத்­து­வார்கள் என்ற திட­மான நம்­பிக்கை உள்­ள­தாகத் தெரி­வித்­துள்ள தமி­ழ­ரசுக் கட்­சியின் மூத்த துணைத் தலை­வரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் அவைத் தலை­வ­ரு­மான சி.வி.கே.சிவ­ஞானம், உதி­ரி­க­ளுக்கு வாக்­க­ளித்து வர­லாற்றுத் தவறை இழைக்கக் கூடாது எனத் தெரி­வித்தார்.

தேர்தல் நிலை­மைகள் தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்தல் என்­பது ஒரு சவால் மிக்க தேர்­த­லாக இருக்கும். ஏனென்றால் எங்­க­ளோடு இருந்த எல்­லோரும் பிரிந்து நின்று கூறு கூறாக தேர்­தல்­களில் பங்­கு­பற்­று­கின்­றார்கள். ஒரு கூட்­ட­மைப்பு அல்­லது கூட்டு ஏற்­ப­டுத்­தப்­படும் அல்­லது ஏற்­ப­டுத்த முயற்சி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.

ஆகவே தேர்தல் சவா­லாக இருக்­கு­மென்­பது உண்மை. ஆனால் இறு­தி­யாக தேர்­தல்­களில் பல அணிகள் உதி­ரி­க­ளாகப் போட்­டி­யிட்­டாலும் அவற்­றை­யெல்லாம் நிரா­க­ரித்து மக்கள் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பை தெரிவு செய்­வார்கள். ஒட்­டு­மொத்­த­மாக கூட்­ட­மைப்பை தெரிவு செய்ய வேண்­டிய தேவையும் இருக்­கி­றது. ஏனென்றால் சில்­ல­றை­யாக, உதி­ரி­க­ளாக பாரா­ளு­மன்­றத்­திற்குச் சென்று சாதிக்க முடி­யாது. ஒரு பல­மாக நிற்க வேண்டும்.

நான் ஏற்­க­னவே சொன்­னது போல ஒரு தலை­மையின் கீழ் நிற்க வேண்டும். அந்தத் தலை­மைக்கு கட்­டுப்­பட்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும். சுய­நலம் கொண்­ட­வர்கள் ஓரிடத்துக்குப் போனால் நாங்கள் இன்னும் சில வியா­ழேந்­தி­ரன்­களை உரு­வாக்க முடியும்.

ஆகவே அதைத் தவிர்ப்­பது என்றால் கூட்­ட­மைப்பை முழு­மை­யான ஒரு தலை­மைத்­துவம் கொண்ட அமைப்­பாக, கட்­சி­யாக மக்கள் தேர்ந்­தெ­டுப்­பார்கள்.  பல­கால வர­லாற்றில் அதுவே நடந்­தி­ருக்­கி­றது. அதையே மக்கள் செய்­வார்கள் என்று நம்­பு­கின்றேன்.

ஆகவே தேர்தல் நாள் வரைக்கும் பெரிய சவா­லாக இருக்­கின்ற விடயம். தேர்­த­லன்று மாறி மக்கள் கூட்­ட­மைப்பை நிச்­ச­ய­மாக ஆத­ரிப்­பார்கள் என்ற திட­மான நம்­பிக்கை எனக்­குண்டு.

மேலும் ஈ.பி.டி.பி.யைத் தவிர ஏனைய அனை­வரும் எங்­க­ளிடம் இருந்து போன­வர்கள் தான். ஆன­ப­டியால் கூட்­ட­மைப்­புக்கு கிடைத்த வாக்­கு­களை அவர்கள் பிரித்­தி­ருந்தால் உடைத்துக் கொள்­வார்கள் என்­பது உண்மை. ஆனால் எந்­த­வ­கை­யிலும் ஒரு தாக்­கத்தை எங்­க­ளுக்கு எற்­ப­டுத்தக் கூடிய கூட்­ட­ணி­யாக அல்­லது எதி­ர­ணி­யாக அது அமை­யாது.

இப்­பொ­ழுது அவ்­வா­றான எதி­ர­ணிகள் என்­றெல்லாம் பேச்­சுகள் இடம்­பெ­று­வது இயல்பு. ஆனால் தேர்தல் நாள் முடிவில் மக்கள் எங்கள் பக்கம் தான் நிற்­பார்கள். எல்லாக் காலத்­திலும் வர­லாறு அப்­படித் தான் சொல்­லி­யி­ருக்­கி­றது.

குறிப்­பாக 2004 தேர்­தலில் எந்­த­ள­வுக்கு வெற்றி பெற்றோம். எத்­தனை இலட்­ச­மாக வாக்­கு­களைப் பெற்று வெற்றி பெற்­ற­வர்கள் எல்லாம் அதன் பின் வெளி­யேறி என்­னத்தைப் பெற்­றார்கள்? மக்கள் என்ன தீர்ப்பு வழங்­கி­னார்கள் என்று பார்க்க வேண்டும். அந்த மாதி­ரி­யான ஒரு நிலை இந்தத் தேர்­த­லிலும் ஏற்­படும்.

இதே வேளை கூட்­ட­மைப்பிலிருந்து போன­வர்கள் திரும்பி வரலாம். அதற்­கான வாய்ப்பு இருக்­கி­றது என்று நான் கூட சொல்­லி­யி­ருந்தேன். ஆனால் என்னைப் பொறுத்­த­வ­ரையில் அவ்­வா­றாக வரு­வ­தற்­கான சூழல் ஏற்­ப­டு­மென்று நான் எதிர்­பார்க்­க­வில்லை. ஆகவே உதி­ரி­க­ளாக போட்டி போடு­கின்ற நிலைமை தான் ஏற்­ப­டு­மென்று நான் நம்­பு­கின்றேன்.

அவ்­வாறு உதி­ரி­க­ளாக போட்­டி­யிட்டால் மக்கள் தங்­க­ளது தீர்ப்பை மிகத் தெளி­வாக பல­மாக இருந்து பேசக் கூடிய, செயற்­படக் கூடிய ஒரு கட்­ட­மைப்­பாக கூட்­ட­மைப்பு தொடர்ந்து இருக்­கின்ற கார­ணத்­தினால் இன்­னு­மொரு பரீட்­சார்த்­தங்­க­ளுக்குப் போகாமல் இன்­னொ­ரு­வரை நம்பி ஏமா­று­கின்ற நிலைக்கு போகாமல் கூட்­ட­மைப்பை ஆத­ரிக்க வேண்­டு­மென்­பது தான் என்­னு­டைய நிலைப்­பாடு.

மக்கள் நலன் சார்ந்து, தேசிய நலன் சார்ந்து, தமிழ் தேசிய இனம் சார்ந்து கூட்­ட­மைப்பு என்ற கட்­ட­மைப்பு பல­மாக இருக்க வேண்டும். அதற்­கான ஆத­ரவை மக்கள் தர வேண்டும். ஆகவே விருப்­ப­ மில்­லா­த­வர்கள் யாராவது இருந்தால் அவர்களைத் தவிர்த்து ஏனையவர்களைத் தெரியு செய்யுங்கள் .

எதற்காகவும் கட்சியைக் கைவிடாமல் கட்சிக்கு வாக்களியுங்கள். கட்சியை ஆதரிக்க வேண்டிய தேவை மக்களுக்கு இருக்கிறது. அதனை மக்கள் நிச்சயமாக செய்வார்கள் என்பது என்னுடைய வர லாற்று அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அவ்வாறே செய்வார்கள் என்று நான் திட மாக நம்புகிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02