மகாவலி 'எல்' வலயத்திலுள்ள வெற்றுக்காணி­களை சம்­பந்­தப்­பட்ட பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு வழங்­க நடவடிக்கை எடுக்கவும் - சாள்ஸ் நிர்­ம­ல­நாதன்

Published By: Daya

07 Feb, 2020 | 11:09 AM
image

மகா­வலி 'எல்' வலயப் பகு­தியில் தென் பகுதி மக்­களைக்  குடி­யேற்­றி­யி­ருக்கும் பகு­தி­களைத்  தவிர்த்து  அங்கு மிகு­தி­யாக உள்ள வெற்றுக் காணி­களை அப்­ப­கு­தியில் பூர்­வீ­க­மாக வாழ்ந்த தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­காக, ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மா­னியை மீள் பரி­சீ­லனை செய்து சம்­பந்­தப்­பட்ட பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு காணி­களை வழங்க ஆவன செய்ய வேண்டும் என வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாள்ஸ் நிர்­ம­ல­நாதன் தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­ப­திக்கும் சம்­பந்­தப்­பட்­ட ­அ­மைச்­சுக்கும் இது விட­ய­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

 1984ஆம் ஆண்­டுக்குப் பிற்­பாடு மண­ லாறு பிர­தே­சத்தில் பூர்­வீ­க­மாக வாழ்ந்த தமிழ் மக்­களை வலுக் கட்­டா­ய­மாக வெளி­யேற்­றி­ய பின் 1988,2007 ஆகிய ஆண்­டு­களில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்த விஷேட வர்த்­த­மானி அறி­வு­றுத்­தல்­களின் மூலம் தமிழ் விவ­சாய மக்­களின் விவ­சாய இடங்கள் மகா­வலி 'எல்' பிரி­வாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தன.

இதனால்  முல்­லைத்­தீவு கரை­து­றைப்­பற்று மற்றும் வவு­னியா மாவட்­டத்தில் வவு­னியா வடக்கு பிரிவு தமிழ் விவ­சாய மக்கள் மிகவும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

இப் பகு­தியில் தென் பகுதி மக்­களைக் குடி­யேற்­றிய பின் தமிழ்க் கிரா­மங்­க­ளி­னது பெயர்­களும் குளங்­களின் பெயர்­களும் சிங்­களப் பெயர் மாற்­றங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளன.

இந்த நிலையில் அப்­ப­கு­தியில் விவ­சாயம் செய்­கின்ற தமிழ் மக்கள் அங்கு குடி­யேறி தங்கள் விவ­சாயச் செய்­கையை மேற்கொள்ள முடி­யாத சூழ்­நி­லை­களும் காணப்­ப­டு­கின்­றன.

ஆகவே தென் பகுதி மக்­களை குடி­யேற்­றிய பகு­தி­களைத் தவிர்த்து மகா­வலி எல் வலய பகு­தி­யி­லுள்ள மிகுதிக் காணி­களை ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மா­னியை மீள் பரிசீலனை செய்து கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்கும் அக் காணிகளை ஒப்படைத்து இச்செயலகங்கள் மூலம் இக்காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை இம் மக்கள் பெற ஆவன செய்யவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08