தோட்டத்தொழி­லா­ளர்­களை இனியும் ஏமாற்­றக்­கூ­டாது

Published By: Daya

07 Feb, 2020 | 10:18 AM
image

அர­சாங்கம் கூறி­ய­தற்­க­மைய தோட்டத் தொழி­லா­ளர்­களின் 1000 ரூபா அடிப்­படைச் சம்­பளம் மார்ச் மாதம் முதலாம் திக­தி­யி­லி­ருந்து வழங்­கப்­படும். 1000 ரூபா அடிப்­படைச் சம்­ப­ளத்தை முழு­மை­யாக வழங்க தோட்ட நிறு­வ­னங்கள் இணக்கம் தெரி­வித்­துள்­ளன என்று பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ பாரா­ளு­மன்­றத்தில் உறுதி வழங்­கி­யி­ருக்­கின்றார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை பிர­த­ம­ரி­டத்­தி­லான கேள்வி நேரத்­தின்­போது மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க தோட்டத் தொழி­லா­ளர்­களின் அடிப்­படைச் சம்­பளப் பிரச்­சினை குறித்து கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார். இதற்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே பிர­தமர் இந்த உறு­தி­மொ­ழி­யினை வழங்­கி­யி­ருக்­கின்றார்.

இத­னை­விட அன்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்தின் இடைக்­கால கணக்­க­றிக்கை தொடர்­பான விசேட அறிக்­கை­யினை வெளி­யிட்டு பிர­தமர் உரை­யாற்­றி­ய­போதும் இந்த விடயம் தொடர்பில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான நாளாந்த சம்­ப­ளத்தை 1000 ரூபா வரையில் அதி­க­ரிப்­ப­தற்­கான கூட்டு ஒப்­பந்தம் அடுத்த வாரத்தில் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. 1000 ரூபா வரையில் அதி­க­ரிப்­ப­தற்கு பெருந்­தோட்ட நிறு­வ­னங்கள் இணக்கம் வெளி­யிட்­டுள்­ளன. இதன்­படி மார்ச் முதலாம் திகதி முதல் நடை­முறைப்­ப­டுத்­தப்­படும் வகையில் இரு­த­ரப்­புக்­கி­டை­யி­லான கூட்டு ஒப்­பந்­தத்தை எதிர்­வரும் வாரத்தில் கைச்­சாத்­தி­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி பெருந்­தோட்ட நிறு­வ­னங்­க­ளினால் நிர்­வ­கிக்­கப்­படும் தேயிலை, தெங்கு, இறப்பர் போன்ற பெருந்­தோட்­டங்­க­ளிலும் மற்றும் சிறு தேயி­லைத்­து­றைக்கும் அர­சாங்கம் முக்­கியம் வழங்கி செயற்­படும் என்று இதன்­போது பிர­தமர் கூறி­யுள்ளார்.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் நாளாந்த சம்­பளம் 1000 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரத்­தின்­போது பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்­டி­ருந்த கோத்­த­பாய ராஜபக் ஷ உறுதி வழங்­கி­யி­ருந்தார். இதே­போன்றே ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்­டி­ருந்த சஜித் பிரே­ம­தாச தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பு வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று உறுதி வழங்­கி­யி­ருந்தார்.

தேர்­தலில் ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜபக் ஷ தெரி­வா­ன­தை­ய­டுத்து தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான இந்த வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­டுமா என்ற கேள்வி எழுந்­தி­ருந்­தது. இந்த நிலையில் கடந்த தைப்­பொங்கல் தினத்­துக்கு முதல் நாள் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நாளாந்த சம்­ப­ள­மாக 1000 ரூபா வழங்­கப்­படும் என்றும் மார்ச் மாதம் முதலாம் திக­தி­யி­லி­ருந்து இந்த கொடுப்­ப­ன­வுக்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது. இதற்­கான அமைச்­ச­ரவைத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டது.

இந்த அறி­விப்பு வெளி­யா­ன­தை­ய­டுத்து தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ளனம் தம்­முடன் கலந்­து­ரை­யா­டாமல் இத்­த­கைய முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்­தது. ஆனாலும் தோட்ட கம்­ப­னி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டியே தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தாக அர­சாங்கம் கூறி வந்­தது. இத்­த­கைய முரண்­பா­டான நிலைமை கார­ண­மாக  1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பு கிடைக்­குமா என்ற கேள்வி தோட்டத் தொழி­லா­ளர்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருந்­தது.

நாளாந்த சம்­ப­ள­மாக 1000 ரூபாவை கம்­ப­னிகள் வழங்க வேண்­டு­மென்றும் இல்­லையேல் தோட்­டங்­களை அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்க வேண்டும் என்றும் இரா­ஜாங்க அமைச்சர் மகிந்­தா­னந்த அளுத்­க­மகே உட்­பட பலரும் கருத்­து­களை தெரி­வித்­தி­ருந்­தனர். தொடர்ந்தும் தோட்டக் கம்­ப­னி­க­ளுடன் பேச்­சுக்கள் இடம்­பெற்று வந்­தன. சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கு­வது தொடர்­பான மாற்று யோசனை ஒன்றை கம்­ப­னிகள் அர­சாங்­கத்­திடம் சமர்ப்­பித்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இந்த நிலை­யில்தான் தற்­போது பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 1000 ரூபா சம்­பளம் வழங்­கப்­படும். அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

உண்­மை­யி­லேயே 1000 ரூபா எந்த அடிப்­ப­டையில் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. தொழி­லா­ளர்­களின் அடிப்­படைச் சம்­ப­ள­மாக 1000 ரூபா வழங்­கப்­ப­டுமா அல்­லது சகல கொடுப்­ப­ன­வு­க­ளையும் உள்­ள­டக்­கிய விதத்தில் இந்தக் கொடுப்­ப­னவு அமை­யுமா என்ற கேள்­விகள் எழுந்­துள்­ளன.

பாரா­ளு­மன்­றத்தில் கருத்து தெரி­வித்­துள்ள பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ தோட்டத் தொழி­லா­ளர்­களின் 1000 ரூபா அடிப்­படைச் சம்­பளம் மார்ச் மாதம் முதல் வழங்­கப்­படும் என்றே தெரி­வித்­தி­ருக்­கின்றார். இது நடை­முறைக்கு சாத்­தி­ய­மா­குமா என்றும் தற்­போது கேள்­விகள் எழுப்­பப்­ப­டு­கின்­றன.

கடந்த நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு வந்­தது.  மலை­யக தொழிற்­சங்­கங்கள் இந்தக் கோரிக்­கையை வலி­யு­றுத்தி வந்­தன. கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லின்­போதும் அர­சியல் கட்­சி­க­ளினால் 1000 ரூபா சம்­பளம் வழங்­கப்­படும் என்ற வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன.

கடந்த கூட்டு ஒப்­பந்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் புதிய ஒப்­பந்­தத்தில் 1000 ரூபா சம்­பளம் வழங்­கப்­பட வேண்டும் என்று பல்­வேறு போராட்­டங்கள் இடம்­பெற்று வந்­தன. கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் கறுப்பு நிற ஆடை அணிந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இளைஞர், யுவ­திகள் இந்தக் கோரிக்­கையை முன்­வைத்து போராட்டம் நடத்­தி­யி­ருந்­தனர். வேலை­நி­றுத்தப் போராட்­டங்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன.

ஆனால், இழுத்­த­டிக்­கப்­பட்டு மேற்கொள்­ளப்­பட்ட கூட்டு ஒப்­பந்­தத்தில் 750 ரூபா சம்­ப­ளமே தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து அர­சாங்­கத்தில் அன்று அங்கம் வகித்த தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் அழுத்தம் கார­ணாக நாளொன்­றுக்கு மேல­தி­க­மாக 50 ரூபா கொடுப்­ப­னவு வழங்­கு­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் இணங்­கி­யி­ருந்­தது. அமைச்­ச­ர­வை­யிலும் இரண்டு தட­வைகள் இதற்­கான அனு­மதி பெறப்­பட்­டி­ருந்­தது. ஆனாலும் 50 ரூபா கொடுப்­ப­னவு கூட அன்று வழங்­கப்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்ட நிலையில் இதனை வழங்­கு­வ­தற்கு முயற்சி மேற்­கொள்­ளப்­பட்டபோதும் அந்த முயற்­சியும் கைகூ­டி­யி­ருக்­க­வில்லை. இவ்­வாறு தோட்டத் தொழி­லா­ளர்கள் ஏமாற்­றப்­பட்ட நிலை­யில்தான் தற்­போது  1000 ரூபா சம்­பளம் வழங்­கு­வ­தற்­கான உறு­தி­மொழிகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இம்­மு­றை­யா­வது ஏமாற்­றப்­ப­டாது தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நாளாந்தம் 1000 ரூபா சம்­பளம் வழங்­கப்­ப­ட­வேண்டும். அதுவும் அடிப்­படைச் சம்­ப­ள­மாக வழங்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாக­வுள்­ளது. இந்த விடயம் தொடர்பில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிரதித் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான வே. இரா­தா­கி­ருஷ்ணன் கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார். தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு  1000 ரூபா சம்­பளம் வழங்­கப்­படும் என்ற அறி­விப்பு வர­வேற்­கத்­தக்­கது. இந்த சம்­பள அதி­க­ரிப்பு அடிப்­படைச் சம்­ப­ள­மாக இருக்க வேண்டும். அதை­வி­டுத்து சம்­பள பொதி­யாக வரு­கைக்­கான கொடுப்­ப­ன­வுகள் அடங்­க­லாக 1000 ரூபா வழங்­கப்­ப­டக்­கூ­டாது என்று அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதே­போன்றே பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணை­யொன்­றினை கொண்­டு­வந்து கருத்து தெரி­வித்த தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். தில­கராஜ் இலங்கை முத­லா­ளிமார் சம்­மே­ளனத்­தினர் 2018ஆம் ஆண்டே 1000 ரூபா தரு­வ­தற்கு உடன்­பட்டு இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தலைவர் ஆறு­முகன் தொண்­ட­மா­னுக்கு கடி­த­மெ­ழு­தப்­பட்­டது. அதன்­படி அன்று ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்தால் முதலாம் இரண்டாம் ஆண்­டு­களில் மொத்தச் சம்பளம் 1000 ரூபாவாகவும் மூன்றாவது ஆண்டில் 1058 ரூபாவாகவும் வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று இதனை மறுத்துவிட்டு தற்போது காலம் தாழ்த்தி அந்தத் தொகையை பெற்றுக்கொடுக்க எத்தனிப்பது அரசியல் நோக்கம் கருதிய செயற்பாடா என்று கேள்வியெழுப்பியிருக்கின்றார்.

எது எப்படியிருந்தாலும் தற்போதைய நிலையில் 1000 ரூபா சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்க செயற்பாடாகும். அடிப்படைச் சம்பளமாக இந்த 1000 ரூபாவை வழங்க அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் கம்பனிகளுடன் உறுதியான பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். இனியும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள விவகாரத்தில் ஏமாற்றப்படுவதற்கு அனுமதிக்க முடியாது. இந்த சம்பள அதிகரிப்பு விடயத்தில் சகலரும் ஒத்துழைத்து தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்த முன்வரவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

(07.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04