2020 ஆண்டின் இறுதிக்குள் பொருளாதாரம் புத்துயிர் பெறும் : ரமேஷ் பத்திரன 

Published By: R. Kalaichelvan

06 Feb, 2020 | 09:09 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கம் மேற்கொண்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் நிதி முகாமைத்துவத்தால் 2020ஆண்டின் இறுதிக்குள் பொருளாதாரம் புத்துயிர் பெறும் என பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி, கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

  

பாராளுமன்றத்தில் இன்று விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்சுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தேசிய பொருளாதாரத்தில் உள்நாட்டு சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.

வாசனைத்திரவியங்கள் மற்றும் சிறிய ஏற்றுமதிப் பயிர்கள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், மீள் ஏற்றுமதிக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிய ஏற்றுமதிப் பயிர்களுக்கு இலங்கையில் நியாயமான விலை கிடைத்துள்ளது.

அத்துடன் நமது நாட்டில் தற்போது சிறு ஏற்றுமதி பயிர்கள்மூலம் 65 பில்லியன் வருமானமாகப் பெறப்படுகிறது. எதிர்வரும் 5 ஆண்டுகளில் 100 பில்லியன் வரை அதனை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது.

அதற்காக பயிர்களுக்கான உற்பத்தி செலவுகளை அரசாங்கம் வழங்கவுள்ளது. குறிப்பாக மிளகு, கறுவா உட்பட பல சிறு ஏற்றுமதி பயிர்களை உற்பத்தியாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளோம்.

இவ்வாறு உற்பத்தியாளர்களுப்கு சலுகைகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் எமது  சர்வதேச சந்தையை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதுடன் புதிய சந்தை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17