பிரதேச சபையின் அனுமதியுடன் மீண்டும்  தனியார் நிறுவனத்தால்  முறையற்ற மண் அகழ்வு 

Published By: Digital Desk 4

06 Feb, 2020 | 06:11 PM
image

முள்ளியவளை கயட்டையடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட பிரபல  தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் முள்ளியவளை பொலிசாரால் கைதுசெய்யபட்டுள்ளனர் .

முள்ளியவளை புளியங்குளம் வீதியில் கரைதுறைப்பற்று பிரதேசசபையால் குப்பை கொட்டப்படும் பகுதியியான கயட்டை காட்டு பகுதியிலிருந்து கரைதுறைப்பற்று பிரேதேச சபையின் அனுமதியுடன் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுவரும் தனியார் ஹோட்டல் ஒன்றினால் கரைதுறைப்பற்று பிரதேச சபையுடன் இணைந்து நந்திக்கடல் வெளியில் மரநடுகை திட்டதுக்கும் குப்பைகளை தன்னார்வ சேவையாக புதைத்து தருகின்றோம்  எனும் பேரில் நூற்றுக்கணக்கான டிப்பர் செம்மண் கனிய வளங்கள் திணைக்களத்தின் அனுமதிகள் எவையுமின்றி அகழப்பட்டு குறித்த  தனியார் நிறுவனத்தின் தேவைக்காக கொண்டுசெல்லப்பட்ட நிலையில் முள்ளியவளை பொலிஸாரால் குறித்த மண்ணகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது .

இதன்போது மண்ணகழ்வுக்காக பயன்படுத்திய கனரக வாகனம் மற்றும்  டிப்பர் ஒன்று மற்றும் இரண்டுபேர் முள்ளியவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .

கடந்த மாதம் 09 ஆம் திகதி அதே இடத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையுடன் இணைந்து பிரதேச சபையின் மரநடுகை வேலைத்திட்டத்துக்கென ஒரு தனியார் நிறுவனத்தால்  மண் அகழப்பட்டு தனியார் நிறுவனத்தின் தேவைக்காக பயன்படுத்தப்பட்ட நிலையில்  வனவளத்திணைக்களத்தினரால் மண்ணகழ்வில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வழக்கு நடைபெற்றுவருகின்றது.

இந்த நிலையில் மீண்டும் கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் கனகையா தவராசாவால்  மர நடுகை வேலைத்திட்டத்தை நந்திக்கடல் பகுதியில் செய்யவும் குறித்த பகுதியில் உள்ள குப்பைகளை புதைப்பதற்கும்  தனியார் நிறுவனத்துக்கு தங்கள் மூலம் அனுமதியினை வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட வனவள திணைக்களத்திடம் அனுமதிகோரியது.

இந்நிலையில் தோண்டப்படும் மண்ணை நந்திக்கடல் வெளியில் மரம் நாட்டும் வேலைத்திட்டதுக்கு மட்டும் கொண்டுசெல்லுமாறும் இந்த நடவடிக்கையை முல்லைத்தீவு வட்டார வன அதிகாரியை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் முல்லைத்தீவு மாவட்ட வன இலாகா திணைக்களம் அனுமதிவழங்கியுள்ளது.

இந்த நிலையில் குறித்த மரம் நடும்  செயற் திட்டம் இடம்பெறும் பகுதியில் வெறும் இரண்டு லோட் மண் பறிக்கப்பட்டுள்ளதோடு  நூற்றுக்கணக்கான லோட் மண் குறித்த தனியார் நிறுவனத்தின் வளாகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது .

அத்தோடு மண்ணை அகழ்ந்து எடுப்பதற்கான அனுமதி முறையாக கனிய வளங்கள் திணைக்களத்திடம் பெறப்படாது வன திணைக்களம் மற்றும் பிரதேச சபையின் அனுமதியுடன் மட்டும்  மண் அகழ்ந்து தனியார் நிறுவனத்தால் கொண்டுசெல்லப்படு குறித்து ஊடகவியலாளர்களால் மாகாண கனிய வளங்கள் திணைக்களத்திடம் தொலைபேசி மூலம் வினவப்பட்ட நிலையில் கனிய வளங்கள் திணைக்கள பதிவாளர் அவ்வாறு எந்தவிதமான மண் அகழ்வுக்கான அனுமதி  தம்மால் முல்லைத்தீவில் வழங்கப்படவில்லை எனவும் அவ்வாறு தமது அனுமதிகள் எதுவுமின்றி அகழ்ந்து செல்லப்படும் மண் சட்டவிரோதமானது எனவும் இதற்கான சட்ட நடவடிக்கையை பிரதேச பொலிஸார் மேற்கொள்ள வேண்டியது அவர்களது கடமை எனவும் தெரிவிக்கப்பட்டது .

  இதனைத்தொடர்ந்து  இந்த சட்டவிரோத மண்ணகழ்வு குறித்து முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஊடகவியலாளர்கள் வினவிய நிலையில் உடனடியாக குறித்த சட்டவிரோத மண்ணகழ்வை தாம் தடுத்து நிறுத்தி கைதுசெய்வதாக தெரிவித்து சம்பவ இடத்துக்கு உடனடியாக பொலிஸ் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டு மண்ணகழ்வில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர் .

இதேவேளை இந்த சம்பவங்களை செய்தி அறிக்கையிட்ட  சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த முல்லைத்தீவு வட்டார வன  திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் காணொளி எடுக்கவேண்டாம்  என தடுத்ததுடன் சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்டவர்களுடன் சுமுகமாக அளவளாவியதையும் அவதானிக்க முடிந்தது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17