தடயவியல் கணக்கறிக்கை மீதான விவாதத்திற்குப் பின்னரே பல விடயங்கள் நிரூபிக்கப்படும் : பந்துல 

Published By: R. Kalaichelvan

06 Feb, 2020 | 03:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் தடயவியல் கணக்கறிக்கை அரசியல் தேவைகளை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டவை அல்ல கடந்த  2010 -2013  வரையான காலப்பகுதியில் பிணைமுறி கொடுக்கல் வாங்களில் எவ்வித முறைக்கேடுகளும் இடம் பெறவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அறிக்கை முழுமையான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் பின்னரே பல விடயங்கள் நிரூபிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் மோசடி தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவின் பரிந்துரையின்  பிரகாரம் தடயவியல் கணக்கறிக்கை மிகவும் துல்லியமான  தகவல்களையும், அழிக்கப்பட்ட  தகவல்களை மீள் எடுத்து உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் மத்திய  வங்கியில் இரு  தடவைகள்  பிணைமுறிகள்  விநியோகத்தில் மோசடிகள் இடம் பெற்றுள்ளன  என்பதை எதிர்க்கட்சியினராக இருந்து பொதுஜன பெரமுனவினரே  வெளிப்படுத்தினோம் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27