வாக்குறுதியில் மாற்றமில்லை ! மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் - பந்துல 

Published By: R. Kalaichelvan

06 Feb, 2020 | 03:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட  மலையக மக்களுக்கு மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் 1000ம் ரூபா அடிப்படை  சம்பளம் வழங்கப்படும். அரசாங்கம் வழங்கி ய வாக்குறுதியில் எவ்வித மாற்றமும் கிடையாது.  தோட்டகம்பனிகள் தொடர்பில் மார்ச் மாதம் 01ம் திகதிக்கு பிறகு  தீர்மானங்கள் எடுக்கப்படும் என தெரிவித்தார் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன.

அரசாங்கம் கூறியதற்கு அமைய அனைத்து பட்டதாரிகளுக்குமான தொழில்வாய்ப்பு பயிற்சிக்கு  உயர் தேசிய பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம. முழுமையான பயிற்சிக்கு  பிறகே  நிரந்த தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அரசியல் தேவைகளுக்காக மலையக மக்கள் மத்தியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ 1000ம் ரூபா அடிப்படை சம்பளத்தை    வழங்குவதாக வாக்குறுதி வழங்கவில்லை.

தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காணப்படும் தேயிலை தொழிற்துறை உற்பத்தியாளர்கள் மற்றும் மலையக மக்களின்   வாழ்க்கை தரம் முன்னேற்றமடைய வேண்டும் என்ற பொது காரணியை கருத்திற் கொண்டே அவர்  ஜனாதிபதி தேர்தல் காலத்தில்  மலையக மக்களிடம் வாக்குறுதி வழங்கினார்.

அரசாங்கம் குறிப்பிட்டதை போன்று மலையக மக்களுக்கு மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து 1000ம் ரூபா அடிப்படை சம்பளம்  வழங்கப்படும் என்று கிடைக்கப் பெற்ற அமைச்ரவை அனுமதியை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ   நேற்று பாராளுமன்றத்தில் மேலும்  உறுதிப்படுத்தியுள்ளார் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22