கொரோனா வைரஸ் குறித்த போலிச் செய்திகளை பரப்புவோர் மீது சட்டநடவடிக்கை

06 Feb, 2020 | 02:35 PM
image

சமூக ஊடகங்களில் கொரோனா வைரஸைப் பற்றிய பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பியவர்களுக்கு எதிராக சில ஆசியநாடுகளின் அரசாங்கங்கள் சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 

மலேசியா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளை சேர்ந்த 16 பேர் வரை கொரோனா வைரஸ் தொடர்பான போலிச்செய்திகளை பரப்பிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நகரமான வுஹானில் ஒரு மாதத்திற்கு முன் பரவிய புதிய கொரோனா வைரஸ் 500 க்கும் மேற்பட்ட இறப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உலகநாடுகளில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலிச்செய்திகள் பல நாடுகளில் பதற்றமான சூழலை மேலும் அதிகரிக்கின்றது.

இதனை தவிர்ப்பதற்காக சர்வதேச ரீதியாக பல நாடுகள் தமது சட்டங்களை கடுமையாக்கியுள்ளதுடன் போலிச்செய்திகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 

இதேவேளை, சிங்கப்பூர் அரசு தனது சர்ச்சைக்குரிய புதிய “போலி செய்தி” சட்டமான போஃப்மாவைப் பயன்படுத்தி ஊடக நிறுவனங்களையும் சமூக ஊடக பயனர்களையும் எச்சரித்துள்ளது.

வைரஸ் தொற்று குறித்த தவறான பதிவுகள், மற்றும் தவறான சிகிச்சைகள், போன்றவை காரணமாகவும் உறுதிப்படுத்தப்படாத பலி எண்ணிக்கை தொடர்பிலும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இதில், மியான்மார் அரச அமைச்சர் ஒருவர் அதிக வெங்காயத்தை சாப்பிட பரிந்துரைக்கும் ஒரு இடுகையைப் பகிர்ந்தமைக்காக கண்டிக்கப்பட்டுள்ளார்.  

இந்தியாவின் தென்மேற்கு மாநிலமான கேரளாவில் வட்ஸ்அப் செய்திகள் தொடர்பாக குறைந்தது ஐந்து பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்று திருச்சூர் மாவட்ட பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தவறான செய்திகளை பரப்பிய சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

வியட்நாமில், குறைந்தது ஒன்பது பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று பிரபலங்கள் கொரோனா வைரஸ் குறித்த பதிவுகள் குறித்து விளக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில்  கடந்த ஆண்டு பல  ஊழியர்களை கொண்டு அமைக்கப்பட்ட போலி செய்தி  எதிர்ப்பு மையத்தினால் ஜனவரி 25 முதல் நான்கு நாட்களில் 7,600 இடுகைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் இணையத்தளத்தில்  22 பதிவுகள் பொய்யானவை என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து  போலிச் செய்தி  குற்றச் சட்டங்களின் கீழ் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பேஸ் புக், டுவிட்டர், யூடியூப், டிக்டொக், ரெடிட், ஸ்நெப்செட் ஆகிய சமூக ஊடகங்களும் போலிச் செய்து குறித்து கண்காணிப்புடன் செயற்பட்டுவருவதாக தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10