சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் குறித்த முக்கிய  உரையாடலை வெளியிட்டது உக்ரேன் தொலைக்காட்சி (உரையாடல் இணைப்பு)

Published By: Digital Desk 4

06 Feb, 2020 | 01:08 PM
image

ஈரானின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கும் ஈரானின் விமானிக்கும் இடையிலான  இறுதி நேர உரையாடலை உக்ரேன் நாட்டுத் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது.

ஈரானின் தெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து கடந்த தை மாதம் 08 ஆம் திகதி உக்ரேனிய தலைநகர் கியோ நோக்கிப் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 176 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் குறித்த ஈரான் நாட்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கும் ஈரானின் விமானிக்கும் இடையிலான இறுதிக்கட்ட உரையாடலையே குறித்த உக்ரேன் நாட்டுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரேனிய தொலைக்காட்சியினால்  ஒளிபரப்பப்பட்ட குறித்த உரையாடல் பதிவு, உக்ரேனிய ஜனாதிபதி மற்றும் ஈரானின் விசாரணைக் குழுவின் தலைவரால் உண்மையானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த உரையாடலில், ஜனவரி 8 ஆம் திகதி காலையில் குறித்த விமானத்தின் விமானி , ஏவுகணை வீசப்படுவதைப் போன்ற ஏதோவொன்றைக் கண்டதையும், அதைத் தொடர்ந்து ஒரு நடுப்பகுதியில் வெடிப்பையும் விவரிப்பதாக அவரின் பதிவு இருந்தது. எரியும் பொருள் காற்றில் பறப்பதைக் காணக்கூடியதாக இருந்ததாகவும் குறித்த விமானி தெரிவிக்கின்றார். 

இந்நிலையில் குழப்பமடைந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் அப்படி எதுவும் நடக்கக்கூடாது எனப் பதிலளித்து, அது தெஹ்ரானை நோக்கிப் பறக்கிறதா என்று கேட்கிறார், அதற்கு ஈரானின் தலைநகரிலிருந்து பறக்கிறது என்று விமானி கூறுகிறார்.

இவ்வாறு குறித்த உரையாடல் நீண்டு செல்கிறது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தையடுத்து விசாரணைகளுக்கு ஈரான் ஒத்துழைக்கப்போவதில்லையெனச் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17