ஜனா­தி­பதி,- பிர­த­ம­ருக்­கி­டையில் ஏற்­ப­டக்­கூ­டிய முரண்­பா­டு­களை தடுக்­கவே 19 இல் திருத்தம் - வீர­கு­மார

06 Feb, 2020 | 11:58 AM
image

(எம்.மனோ­சித்ரா)

ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு இடையே ஏற்­படக் கூடிய முரண்­பா­டு­களை தவிர்த்துக் கொள்ளும் நோக்­கத்­தி­லேயே 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பேச்­சாளர் வீர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக் கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­ப­க் ஷ­வுக்கும் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடை யில் காணப்­படும் அதி­கார முரண்­பாடு கார­ண­மா­கவே 19 இல் திருத்­தங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி முயற்­சிப்­ப­தாக ஐக்­கிய தேசியக் கட்சி கூறு­வதில் எவ்­வித உண்­மையும் கிடை­யாது. தற்­போ­தைய பிர­த­ம­ருக்கும், ஜனா­தி­ப­திக்கும்  இடையில் அவ்­வாறு எவ்­வித முரண்­பாடும் கிடை­யாது.

எனினும் இவர்­களின் பின்னர் எதிர்­கா­லத்தில் ஆட்­சிக்கு வரக்கூடி­ய­வர்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றன. கடந்த ஆட்சி காலத்தில் மைத்­திரி– - ரணில் முரண்­பாடு இதற்கு சிறந்த எடுத்துக் காட்­டாகும். எனவேதான் எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான முரண்­பா­டுகள் ஏற்­பட்டு விடக் கூடாது என்­ப­தற்­காக திருத்­தங்கள் மேற் ­கொள்­ளப்­பட வேண்டும் என்று கூறப்­ப­டு­கி­றது.

ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் பிரச்­சினை இருப்­ப­தாகக் கூறும் ஐக்­கிய தேசிய கட்சி தமக்குள் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைக்கு இன்­னமும் தீர்வுகாணாமல் இருக்­கி­றது. கட்சி தலைவர் ரணில், கூட்­டணி தலைவர் சஜித் என்று புரி­யாத கதையைக் கூறிக்கொண்டி­ ருக்­கி­றார்கள். இவர்கள் இரு­வ­ரது தரப்­பி லும் இரு குழுக்கள் பிரிந்து செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

செவ்­வாய்­க்கி­ழமை நடை­பெற்ற சுதந்­திர தின நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பங்­கு­பற்­றாமை குறித்து வெவ்­வே­று­பட்ட கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அவர் பொலன்­ன­று­வையில் இருந்­த­மையால் தன்னால் நிகழ்வில் கலந்து கொள்ள முடி­யாமல் போனது என்­பதை அறி­வித்­துள்ளார்.

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் நூற்­றுக்கு முப்­பது வீத பிர­தி­நி­தித்­துவம் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு வழங்­கப்­பட வேண்டும் என்று இரு­த­ரப்பு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத் தில் கூறப்­பட்­டுள்­ளது. அதற்கு முன்­னரே இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. எனவே தற்­போது அவ்­வாறு செயற்­பட முடி­யாது என்று கூறு­வதை ஏற்றுக்கொள்ள முடி­யாது. அது கௌர­வ­மான செயல் அல்ல.

மைத்­தி­ரிக்கு இணை தலை­மைத்­துவம்

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராகவும் இருக்­கின்றார். அவ­ரது தலைமைத்துவத் தின் கீழ் கடந்த ஜனா­ தி­பதித் தேர்தலில் கோத்தபாய ராஜப­க் ஷ­வுக்கு ஆதரவளித்து பாரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்தோம். அவரது வெற்றியில் சுதந்திர கட்சி பெரும் பங்காற்றியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சுமார் 15 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து வெற்றியை உறுதிப்படுத்திய சுதந்திர கட்சியை சிலர் புறக்கணிக்க எண் ணுவது கவலைக்குரிய விடயமாகும் என் றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32