சோத­னைச்­சா­வடி விட­யத்தில் முரண்­பட்ட அமைச்சர் டக்ளஸ்

06 Feb, 2020 | 11:22 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குல் இடம்­பெற்று நீண்ட காலத்தின் பின்­னரும் கூட வடக்கில் சோதனைச் சாவ­டிகள் அமைத்து மக்­களை வஞ்­சிக்கும் செயற்­பாடு இடம்­பெ­று­வ­தாக சபையில் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் எம்.பி. முறை­யிட்டார்.

இதற்கு பதி­லளித்த அமைச்சர்  டக்ளஸ் தேவா­னந்தா, வடக்கில் சோதனைச் சாவ­டிகள் அமைத்து தமிழ் மக்­களை வஞ்­சிக்கும் எந்த செயற்­பாடும் இடம்­பெ­ற­வில்லை. நான் கண்ணை திறந்­து­கொண்டே வடக்கில் பய­ணிக்­கிறேன். எனது கண்­க­ளுக்கு அவ்­வாறு எதுவும் தவ­றாக தெரி­ய­வில்லை என்று பதில் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பிர­தமருடனான கேள்வி நேரத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் இது குறித்து கேள்வி எழுப்­பினார். இதன்­போது அவர் கேள்வி எழுப்­பு­கையில்,  உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தலின் பின்னர் வடக்கில் அதி­க­மாக சோதனைச் சாவ­டி­களை அமைத்து தேடுதல் நடந்­தது. இப்­போது மீண்டும் வடக்கில் சோதனைச் சாவ­டிகள் அமைத்து  மக்­களை வஞ்­சிக்கும் நிலைமை உள்­ளது. நாட்டில் குழப்­பங்கள் இருந்தால் இரா­ணுவ புல­னாய்­வினை பலப்­ப­டுத்தி செயற்­பட வேண்­டுமே தவிர மக்­க­ளுக்கு இடை­யூறு கொடுக்­காது செயற்­பட வேண்டும். அதற்­கான நட­வ­டிக்கை எடுக்க  முடி­யுமா என கேள்வி எழுப்­பினார்.

இதற்குப் பதில் தெரி­வித்த அமைச்சர் டக்ளஸ் கூறு­கையில்,

நீங்கள் கூறும் அள­வுக்கு சோதனைச் சாவ­டிகள் இருப்­ப­தாக நான் கரு­த­வில்லை. எந்த விதத்­திலும் இந்த அர­சாங்கம் தமிழ் மக்­களை வஞ்­சிக்கப் போவ­தில்லை. மக்­களை பாது­காத்து முன்­னேற்றும் முயற்சி ­களை மட்­டுமே முன்­னெ­டுக்கும். சமீப காலத்தில் நான் குறித்த பகு­தி­க­ளுக்கு சென்றேன். அவ்­வாறு எத­னையும் நான் பார்க்­க­வில்லை. நான் கண்ணை மூடிக்­கொண்டு பய­ணிக்கும் ஆள் அல்ல. நான் கண்ணை திறந்­து­கொண்டே பய­ணிக்­ கின்றேன். நான் பார்த்த அள­வுக்கு வடக் கில் சோதனை எதுவும் நடக்கவில்லை. உங்களின் கோரிக்கை நியாயமானது என் றால் நான் கவனத்தில் கொள்கிறேன். அவ்வாறு இடம்பெற்றால் நான் கவனம் செலுத்துவேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04