நான் கூறியதாக தவறான தகவல் பரப்பப்படுவதை ஏற்கமுடியாது - கருணா அம்மான்

Published By: Daya

06 Feb, 2020 | 11:05 AM
image

இலங்கையின் தேசிய கீதம்  தமிழில் பாட முடியாது எனத் தான் கூறியதாகத் தவறான தகவல் ஒன்று பேசப்பட்டு வருகிறதை  ஏற்கமுடியாது எனத் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். 

கல்முனை உபபிரதேசசெயலக முன்றலில் நேற்று இரவு 10 மணியளவில் கட்சி ஆதரவாளர்களைச் சந்தித்த பின்னர் தேசிய கீத விவகாரம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய  கேள்விக்குத் தனது தன்னிலை விளக்கத்தை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் இலங்கையின் தேசிய கீதம்  தமிழில்  பாட முடியாது எனத் தான் கூறியதாகச் சிலர் தவறாக மக்களை வழிநடத்துவதை மறுக்கின்றேன்.அதில் ஒரு தவறான விடயம் இடம்பெற்றதாகப் பகிரப்பட்டு வருகின்றது அதாவது ஏற்கெனவே வர்த்தமானியில்  தமிழில் தேசிய கீதம் பாட முடியும்  எனத் தீர்மானிக்கப்பட்டு  வெளியிடப்பட்டுள்ளது. 

 அந்த வகையில், பிரதமர் தமிழில் தேசிய கீதம் பாட முடியும் என ஏற்கெனவே தெரிவித்தார். ஆனால் இக்கூட்டத்தில் இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடலாம் என்பதை நான் மறுத்ததாகத் தவறான தகவல் என்று பேசப்பட்டு வருகிறது இதனை நான் உண்மையில் மறுக்கிறேன்.

 இலங்கையில் இன்று நாங்கள் மதிக்கப்படுகின்ற மக்களாக இருக்கின்றோம் ஏனென்றால் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகிறது. இந்தியாவில்  24  மாநிலங்கள் இருந்தபோதிலும் அங்கு ஒரு மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படுகிறது. 

இதே முறைதான் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளது. அந்த நிலையில்தான் எமது ஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடலாம் எனத் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. தமிழ் மொழியில் பாடலாம் என்பது இதனை ஏன் இங்கு விவாதிக்கிறார்கள் என்று கேட்டதே ஒழியத் தமிழ் மொழியில் பாடக் கூடாது என நான் கூறவில்லை.  

பாராளுமன்றத்தில் இருக்கும் போதே நான்  தமிழில் தேசிய கீதம் பாடவேண்டும் எனக் கூறி இந்த விடயத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்திக் கொண்டு வந்தவன்.  இந்த விடயத்தில் எனக்குப் பக்கபலமாக இருந்தவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆவார்.

எனவே  இதனை தற்போது தவறான முறையில் பிரச்சாரம் செய்துவருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரன் கோடீஸ்வரனும் இதனைத் தவறாகத்  தெரிவித்துள்ளார். தமிழில் தேசிய கீதம் பாடுவதை நான் தடுத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

முதலில் அவர்  ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய கட்சி   தனித்தமிழ் கட்சி. எமது கட்சியின் பெயர் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி. தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டும் தமிழர்களைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகத்தான் எமது கட்சியைத் தொடங்கி அதில் பாரிய வளர்ச்சியைக் கண்டு வருகின்றோம் .அவ்வாறான  நாங்கள் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை எவ்வாறு நாங்கள்  மறுப்போம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் .

எங்களது வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவர்களது கடந்தகால தவறுகளை நியாயப்படுத்துவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாகரீகமற்ற அரசியலை தற்போது செய்து வருகின்றனர். அதனை முதலாவதாக முன்னின்று செய்து வருபவர் கோடீஸ்வரன் எம்.பி .  அம்பாறை மாவட்டத்திலே அவர் நிச்சயமாகத்  தோற்கப்போகின்றார். மக்கள் அவருக்கான பதிலடி கொடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44