முல்லைத்தீவு வன திணைக்களத்தால் கடந்த ஒரு மாதத்தில் 13 இலட்சம் பெறுமதியிலான மரகடத்தல் முறியடிப்பு 

Published By: Digital Desk 4

05 Feb, 2020 | 11:03 PM
image

முல்லைத்தீவு வன திணைக்களத்தால் கடந்த ஒரு மாத கால பகுதியில் 13 இலட்சம் பெறுமதியிலான சட்டவிரோதக வெட்டி செல்லப்பட்ட  மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு வட்டார வன அதிகாரி து. கௌதமன் தெரிவித்துள்ளார் .

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு வனப்பகுதிகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெட்டி கடத்தி செல்லப்பட்ட மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (04) முல்லைத்தீவு வள்ளிபுனம் காட்டு பகுதியிலிருந்து சட்டவிரோதமாக வெட்டி செல்லப்பட்ட 1 1/2 இலட்சம் ரூபா பெறுமதியிலான  பாலை மரக்குற்றிகளுடன் வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . 

இதன்போது மரம் கடத்தியவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் வாகனத்திலிருந்து 1.32.500 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது .

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இன்றையநாள் வரையான காலப்பகுதியில் 17 வாகனங்களுடன்  13 இலட்சம் பெறுமதியிலான  மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இவ்வாறு  கைதுசெய்யபட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதில் 07 வழக்குகள் இன்று வரையிலான நாட்களில் நிறைவடைந்துள்ளது . இந்த வழக்குகளுக்காக இரண்டு இலட்சத்து ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு வட்டார வன அதிகாரி து. கௌதமன் தெரிவித்துள்ளார் .

குறைந்தளவான ஆளணி வழங்களுடன் முல்லைத்தீவு வன திணைக்களம் இயங்குகின்ற போதிலும் பல சிரமங்களுக்கு மத்தியில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டு வருகின்றதாக முல்லைத்தீவு வட்டார வன அதிகாரி து. கௌதமன்  மேலும்  தெரிவித்தார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04