இலங்கை மக்களிடம் மன்னிப்புக் கோரிய கொரோனாவால் பாதிப்புக்குள்ளான சீனப் பெண்  

Published By: Vishnu

05 Feb, 2020 | 09:16 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சுற்றுலா பயணிகள் 5,005 பேரை உள்ளடக்கிய மூன்று  சொகுசு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

  1952 பயணிகள், 872 பணியாளர்களுடன்  சன் பிரின்சஸ் எனும் சொகுசு கப்பலும், 2,470 பயணிகள் 1,425 பணியாளர்களுடன் கூடிய  குயின் மேரி - 2 கப்பலும், 583 பயணிகள், 366 பணியாளர்களுடன் கூடிய  பெளடிகா கப்பலுமே இவ்வாறு கொழும்பை வந்தடைந்துள்ளன.

கொழும்பு துறைமுகத்தை இன்றும் நேற்றும் வந்தடைந்துள்ள குறித்த கப்பலில் வந்த அனைவரும் விஷேடமாக கொரோனா பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டதாக  சுகாதார அமைச்சின்  தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். 

அவர்கள் அனைவரினதும் விபரங்கள் பெறப்பட்டு விஷேட கண்காணிப்புக்களும் இடம்பெற்று வருகின்றன.

இதனிடையே இலங்கையில்  கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான சீனப் பெண் குணமடைந்துள்ள நிலையில், தான் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோருவதாக  அவர் தெரிவித்துள்ளார். 

சீனர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான வீ செட் சமூக வலைத்தளத்தின் ஊடாக அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.  

அத்துடன் தன்னை குணப்படுத்திய இலங்கையின் சுகாதார சேவையினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சீனாவின் சில நகரங்களுக்கான விமான சேவைகளை நாளை முதல் மட்டுப்படுத்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பீஜிங், ஷங்காய் மற்றும் கென்டன் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41