25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட பிரதேச சபையின் உப அலுவலகம்

05 Feb, 2020 | 05:15 PM
image

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச சபையின் ஆரம்ப காலத்தில் இருந்து இயங்கி வந்து இடைநிறுத்தபட்ட கோயிலடி உப அலுவலகம் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நேற்று (04) காலை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச சபையின் தமிழ் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இனங்க திறந்து வைக்கப்பட்ட இந்த உப அலுவலகத்தின் செயற்பாடுகள் 1995ம் ஆண்டுக்கு பின் யுத்தம் காரணமாக முள்ளிப்பொத்தானையில் உள்ள பிரதான அலுவலகத்தின் கீழ் மாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 25 அண்டுகளின் பின்னர் இவ் உப அலுவலகமானது இப்பகுதியின் தமிழ் உறுப்பினர்களினதும் பொது மக்களின் வேண்டுகோளுக்கு இனங்க திறந்து வைக்கப்பட்டது.

இதன் மூலமாக பிரதேச சபையின் சேவைகளான நீர் வளங்கள் வடிகால் வெட்டுவதற்கான அனுமதி கடைகளுக்கான வரி செலுத்துதல் , முற்சக்கரவண்டிக்கான அனுமதி பெறல், கிணறு வெட்டுவதற்கான அனுமதி ,மலசல கூட குழி வெட்டுவதற்கான அனுமதி  , வானங்களை வாடகைக்கு பெறல் போன்ற சேவைகளை இவ் அலுவலகம் மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் மூலம் 10 கிலோமீற்றர் சென்று தமது சேவையைப் பெற வேண்டிய நிலையில் இருந்த தமிழ் மக்கள் செறிந்து வாழும் 5க்கு மேற்பட்ட தமிழ் கிராம மக்களுக்கு ஆறுதல் கிடைத்துள்ளது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56