டெய்லரின் சதத்துடன் முதல் வெற்றியை பதிவுசெய்த நியூஸிலாந்து!

Published By: Vishnu

05 Feb, 2020 | 03:55 PM
image

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் இடம்பெற்ற இருபதுக்கு - 20 தொடரை இந்திய அணி 5:0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூஸிலாந்தை வைட் வோஷ் செய்தது. 

இந் நிலையில் இன்றைய தினம் ஆரம்பமான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களை குவித்தது.

348 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.1 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து முதல் வெற்றியை பதிவுசெய்தது.

நியூஸிலாந்து அணி சார்பில் மார்டின் குப்டீல் 32 ஓட்டங்களையும், ஹென்றி நிக்கலஷ் 78 ஓட்டங்களையும், டொம் ப்ளண்டெல் 09 ஓட்டங்களையும் டொம் லெதம் 69 ஓட்டங்களையும் ஜேம்ஸ் நீஷம் 09 ஓட்டங்களையும், கிரேண்ட்ஹோம் ஒரு ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழக்க, ரோஸ் டெய்லர் 84 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கலாக 109 ஓட்டங்களையும், மிட்செல் சாண்டனர் 12 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும், சர்துல் தாகூர் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07