இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

Published By: R. Kalaichelvan

05 Feb, 2020 | 06:08 PM
image

காசாவில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குலில் இஸ்ரேல் பகுதியில் 3 ரொக்கெட்டுகள் வீழந்து வெடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தெற்கு காசா பகுதியில் ஹமாஸுக்கு சொந்தமான பயங்கரவாத இலக்குகளை தாக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கடந்த சில வராமாக இஸ்ரேல், காசா எல்லைக்கருகில் பல தாக்குதல்கள் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

காசா பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன.

மேலும் இதுபோன்ற 13 ஏவுதல்களை இஸ்ரேல் சமீபத்தில் சந்தித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படை விமானங்கள் தெற்கு காசாவின் அருகே பல பயங்கரவாதிகளின் இலக்குகளைத் தாக்கியதாக பாலஸ்தீனிய நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு குறித்த பிராந்தியத்தில் நடந்து வரும் பதற்றங்களை தணிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் அது பலனளிக்கவில்லையென அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கின்றது.

இந்நிலையிலேயே  இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கு காசா பகுதியில் ஹமாஸுக்கு சொந்தமான பயங்கரவாத இலக்குகளை தாக்கியுள்ளதாக சர்வதேச செய்தி தளம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52